கைவிடத் துணிந்து திருந்துவீராக

மாற்றுருவில்
மகுடம் சூட நினைக்கும்
மாந்தர் உம் சிந்தனைகளை ,
மானபங்கம் செய்ய ஏற்பீரோ..?!

விளையாடுவது
விவகாரமெனப் புரிந்தே
விதியைத் தேடிக்கொள்ள ,
விரும்பித் தான் எத்தனித்தீரோ..?!

கடமையற்று
களிப்போடு பழகிடும்
கண்ணியமற்ற நடத்தையை ,
கடிந்திட்டால் அதனை மதிப்பீரோ..?!

கேவலமான
கேட்பாரற்ற உம் மடமை
கேடுகளை உண்டாக்குவது ,
கேலிக் கூத்துக்கள் என்றறிவீரோ..?!

குற்றமாய்
குழப்பங்கள் செய்து
குமுறல்களைத் தருகிறீரே
குத்திக் காட்டினால் மறுப்பீரோ..?!

ஒழுக்கமற்ற
ஒவ்வொரு செயலும்
ஒழிந்தே தீரும் என்பதை ,
ஒருபொழுதும் அறியமாட்டீரோ..?!

அடக்கமான
அநியாயக்காரர்களே இது
அரக்ககுணத்தினும் மோசம் ,
ஆதலால் கைவிட்டுத் திருந்துவீர்...!!!

எழுதியவர் : புலமி (4-Jan-13, 3:16 pm)
பார்வை : 113

மேலே