எழுத்து .காமும் நானும் !
சிறிது நாளாயினும்
ஒன்றி போய்விட்டோம்
கவிதையால்
நீயும்
நானும் !
எத்துனை இதய ஓசைகள்
கவிதைகளாக
குவிகின்றன
உன்னில் !
பாரதி கண்டால்
திருத்திகொள்வான்
"தமிழ் இனி மெல்ல சாகும் "
எனும்
கருத்தினை !
இணையத்திலும்
ஜீவித்துவிட்டோம்
பால்மணம் மாறாத
பச்சிளம் குழந்தை
போல்
புன்னகைக்கிறது
தமிழ் !
தமிழ் எனும்
இ(ன)தயத்தை
உயிர்ப்பித்த
புது களம்
எழுத்து.காம்
என்னும்
வலைதளம் !
வாழ்க நீவிர்
எண்ணம்
வளர்க தமிழ்
இனம்
ஒளிர்க
தமிழ் மொழி
மலர்க பாரத
நாடு !