ஊரோடு ஒத்து உறவோடு வாழு
வழிந்தோடும் ஆசைகள்
நிறைவேறும் போது
ஈடில்லா இன்பம்
உனக்கேதான் சொந்தம்
அர்த்தமில்லா ஆசைகள்
அஸ்தமிக்கும் போது
அர்த்தமுள்ள ஆசைகள்
ஈடேற தடையேதுமில்லை
நேர் கொண்ட உழைப்பால்
தான் கொண்ட செல்வம்
தடையேதுமின்றி
உன்னோடு தாங்கும்
பாதைகள் மாறிப் போகின்றபோது
இருக்கின்ற அனைத்தும்
இல்லாமல் போகும்
உன்னோட வாழ்க்கை
நல்வாழ்க்கை ஆகா
ஊரோடு ஒத்து
உறவோடு வாழு...