மூன்று தட்டுத் தராசு

முரலு மிசை வண்டினங்கள்
குனுகல் மொழி மணிப் புறாக்கள்
அகவல் ஓசை மயில் பேடுகள்,
கூவல் பாட்டுக் குயிலினங்கள்

இனிவருங் காலங்களில்
கருவிகளின் பதிவில் மட்டும் .

உயிர் காற்றின் பிறப்பிடமாம்
காடுகளை மேய்ந்து விட்டார் .
கழனிகளை ஏப்பம் விட்டார் .

காங்கிரீட் கூடு அடுக்கி,
கதவு சாத்தி எச்சமிட்டார்.
உள்கூடு பதப் படுத்தி
சூழ்நிலையைச் சூடேற்றி

ஒசோனை ஓட்டை போட்டு,
பொறுப்பற்ற செயல்களினால்
சொரிநோயை வாங்குகிறார் .

உணவு செயும் உழைப்பை விட்டார்
வயல் வரப்பைப் பூங்கா ஆக்கி ,
ஆடு மேயாப் புல்தரை அமைத்து,
அரையூர் செலவுகள் செய்தார்.

வெயில் பாராது,முகம் காணாது
உழைப்பவன் ஒருவன் என்றால்,
உண்பதேன்னவோ......
உழைப்பு மறந்தோர் ஆயிரம் பேர்.

துலாக்கோல்தான் சரியில்லை
என்றுபார்த்தால் எடைக்கல்லும்
துலக்கமில்லை.

'நியாயம் என்பது அறநிலை 'என்றால்
இவர்கள் மட்டும் ஏன் இப்படி...?

மூன்று தட்டுகளில் ஒரு தராசு போல...!

எழுதியவர் : Minkavi (4-Jan-13, 11:08 pm)
பார்வை : 191

மேலே