உழவின்றி உலகில்லை ( பொங்கல் கவிதைப் போட்டி )

வானின் துளி மண்ணில் பொருள்பட
ஊனில் உயிர் ஒட்டி இருந்திட
வாழும் வழி வசந்தம் என்றிட
உழவுத் தொழில் உலகம் சிரித்திட.....!

கடவுள் தனில் கருணை தோன்றிட
காட்சிப் பொருள் இதமாய் மாறிட
கவலைப் பசி இறந்தே ஒழிந்திட
கையில் ஏர் கவிதை எழுதிட......!

நகரம் அது நலமாய் வளர்ந்திட
நகரும் நொடி வளமாய் அமைந்திட
நலிந்தே அவன் வியர்வை சிந்திட
நலமே தரும் உழவே சிறந்திட......!

அறிவின் இயல் அழகாய் வென்றிட
அணுவின் திறன் அண்டம் காத்திட
அளவாய் சோ- றங்கே இருந்திட
அமுதாய் ஏர் ஆழ்ந்தே உழுதிட.....!

ஆற்றல் அது அசைந்தே உயர்ந்திட
ஆன்மா அது இசைந்தே ரசித்திட
ஆங்கோர் தொழில் உழவே என்றிட
ஆன்றோர் சொல் அழகாய் இயம்பிட..!

இறையின்றி அசைவுகள் நின்றிட
இரையின்றி இறையும் வருந்திட
உழவின்றி இரையும் மறைந்திட
உழவின்றி உலகம் இல்லையே.......!

எழுதியவர் : RANJITHA (4-Jan-13, 11:26 pm)
பார்வை : 201

மேலே