யாருக்கு நன்றி சொல்வது ......

நீ ...
அன்னத்தைப் போல்
ஊர்குளத்தில்
நீந்துகின்ற அழகில் ...அங்கு இருக்கும்
தாமரை கூட உன்னை
காதலிக்க தொடங்கியிருக்கும் ...
அவ்வளவு அழகு.....

மின்னலைப்போல் பளிச்சிடும் ..உன்
வெண் பற்களும்
நீ சிந்துகின்ற
புன்னகையும்
பார்த்து
மின்னலே
வெட்கப்பட்டது ....

மழை வந்த நேரம் ... உன்
தேகத்தில் முத்துக்களாய் ....
மழைத் துளிகளும்
உன்னை தொட்டுவிட்டதே ....

மழையை ரசித்தபடி
நீ ஆடிய ஆட்டத்தில் ..
...உன்
இளமையின்
அழகினை
அங்கங்களும்
வெளிபடுத்தின
நானே ... பேரழகியென்று ...

இதை நேரில் கண்ட
நான்
யாருக்கு நன்றி சொல்வது
மழைக்கா
இல்லை உன்னை படைத்த
இறைவனுக்கா ....ரோஷினி

எழுதியவர் : ROSHINIJVJ (5-Jan-13, 10:10 pm)
பார்வை : 146

மேலே