வெள்ளாடை துறவி

சமர்ப்பணம் : திருவள்ளல்இராமலிங்க அடிகளின் பாதத்திற்கும் ,
அவரது சிஷ்ய கோடிகளின் பாதங்களுக்கும் இக்கவிதை சமர்ப்பணம் !
--------------------------------------------------------------------------
சமரச சன்மார்க்க நெறிதனை
இப்பாரினில் பரப்பி !
தீறமிக்க தீந்தமிழிழ் கவிதைகள்
பல எழுப்பி !
தினம் செத்து செத்து
பிழைக்கும் இம்மானுடம்
மறைந்து சாகாகல்வியின்
நுட்பத்தை அறிந்து !
சாகா நிலை எய்தும் கலையினை
போதித்து!
பரமன் வருவான் பணிவுடையார்
நெஞ்சத்து எனும்
வாக்குகிணங்க வெள்ளாடை
அணிந்து திருமறை
வரிசையில்
அருட்பபா தந்து
ஆம் திருவருட்பா தந்து !
பசியால் வாடியவர்கெல்லாம்
அன்னமடம் அமைத்து
அருட்பெரும்சோதி எனும்
சீர்திருத்த மந்திரம் முழங்க -
உழைத்து நிற்குணன்
ஆனீர் ;பரமனின் பொற்பதம்
கண்டீர் !
ஒதாதுனர்ந்தீர்
மனம் தனை அளிக்கும்
கலை தனை தந்தீர் !

நிலையா யாக்கை நிலைக்கும்
என்று உணர்ந்தீர் !
உணர்ந்ததை உணர்த்த பெரும்பாடு
பட்டீர்!
சித்துக்கள் பல கண்டீர் ;துவராடை அழித்த
வெள்ளாடை சித்தரானீர் !
காயத்தை மறைக்கும்
மதிநுட்பம் கண்டீர் !
காயந்தனை ஜோதியில்
மறைத்து அருட்பெரும்ஜோதி
வள்ளல் ஆனீர் !
திருஇராமலிங்க அய்யே நின் திருவடி
சரணம் ,சரணம் ,சரணம் தேவே !

எழுதியவர் : கார்த்திக்-திருநெல்வேலி (5-Jan-13, 10:00 pm)
சேர்த்தது : கார்த்திக்
பார்வை : 116

மேலே