\'\'பொங்கல் திருவிழா கவிதை போட்டி\'\' தை மகளே வருகவே!

தை மகளே வருகவே

என்தாய் மட்டுமல்ல, என்னுயிர் மகளே
நின்தாயும் நினைசுமந்த மாதமும் பத்தே
குழந்தையாய் வருவாயென அரும்பி நிற்க
குமரியாக வந்து குறும்பாக சிரிப்பதேன்………..

பச்சையுடையணிந்து மொச்சை பயிராக வந்தாய்
மாலையிளம் வெயில்பூசி மஞ்சளாக வந்தாய்
காலையிளம் ஓளிவீசி நெற்கதிராக வந்தாய்
துளி தேன்சொட்டுக்கள் சேர்த்து கரும்புக்கற்றையாக இனிப்பதேன்……

மூ மகளாய் தனிதனியாக வாராது
மூவரூம் இணைந்து ஒருமகளாக வந்து
ஏழு பருவம் இலக்கணம் யுடைத்து
இளம் பருவ செழுமையாக பிறந்ததேன்……..

ஆடிமாத அக்காள் விதைக்க வழிவிட்டாள்
ஐப்பசிமாத அக்காளோ நீரூற்றி வளர்த்தாள்
நின் வெள்ளைச்சிரிப்பை தமிழகம் வரவேற்க
தாவணிபோட்டுவந்த தங்கமகளய் நிற்பதேன்………

என்கற்பனைக்கு சிறகு கொடுத்த மகளே
ஆறாமறிவு உயிரை காக்கும் ஒப்பற்றவளே
மகளை பெற்றோர் வளர்ப்பது இயற்கை
மகள் பெற்றோரை வளர்த்து காப்பதேன்……..

நீ தைமகளள்ள இந்த தரணிக்கு தாய்!…

வாழ்க வளமுடன்

எழுதியவர் : சிவகுமார் (6-Jan-13, 1:28 pm)
பார்வை : 445

மேலே