Yaazhini Kuzhalini - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Yaazhini Kuzhalini |
இடம் | : சான் பிரான்சிஸ்கோ |
பிறந்த தேதி | : 16-Sep-1982 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 04-Mar-2014 |
பார்த்தவர்கள் | : 148 |
புள்ளி | : 13 |
எழுதுவது எனக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்காகும். நான் இறைவனின் திருவருளால் இது நாள் வரை அறிந்தவற்றை அனைத்தையும் பிறருடன் பகிர்ந்துக் கொள்வதே என் அவாவாகும். அதற்காகவே நான் இவ்வலைப்பக்கத்தில் இணைந்தேன். நான் வேதியியலில் முதுஅறிவியல் பட்டம் பெற்றுள்ளேன். ஆதலால், தமிழில் சிறந்த அறிவியல் கட்டுரைகளையும் விரைவில் வடிக்க விழைகிறேன்! எல்லாம் வல்ல அண்ணாமலையான் அதற்கு எனக்கருள்வானாக!
நாகப்பட்டினம் மாவட்டம் நன்னிலத்திலிருந்து 15 கி. மீ. தொலைவிலுள்ள ஊர் திருமருகல் ஆகும். ஊர் முழுவதும் மருகல் என்னும் வகை வாழை மரங்கள் நிறைந்து காணப்படுவதால், ஊருக்கும் அப்பெயரே வழங்கப்பட்டது.
மதுரையில் வாழ்ந்த ஒரு செட்டியாருக்கு ஏழு மகள்கள் இருந்தனர். அவர் தம் மு°த்த மகளை தம் மருமகனுக்கு மணமுடிப்பதாக வாக்களித்து, பின் ஒரு பணக்கார வரன் வந்தவுடன் தம் மருமகனிடம் தம்முடைய இரண்டாவது மகளை அவனுக்கு மணமுடிப்பதாக வாக்களித்து, மு°த்த மகளை பணக்கார வரனுக்கு மணமுடித்து விட்டார். இவ்வாறாக ஒன்றன் பின் ஒன்றனாக மருமகனுக்கு பொய் வாக்களித்து தம்முடைய ஆறு மகள்களையும் வேறு பணக்கார பிள்ளைகளுக்கு மணமுடி
ஒரு முறை அருட்பெருஞ்ஜோதி வள்ளலாரிடம் அவருடைய குரு பின்வருமாறு வினவினார்:
"இராமலிங்கம்! நீயோ முற்றும் துறந்த துறவி. இருப்பினும் இறைவனை ஓயாமல் வேண்டிக் கொண்டே இருக்கிறாய். அப்படி இறைவனிடம் ஓயாமல் என்ன தான் வேண்டுவாய்?"
இதற்கு உடனே அருட்பெருஞ்சோதி வள்ளலார் பெருமான் பின்வரும் பாடலை பதிலாகப் பாடினார்கள்:
ஒருமையுடன் நின் திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார்தம் உறவு கலவாமை வேண்டும்
பெருமைமிகு நின் புகழ் பேசியிருக்க வேண்டும்
பொய்மை பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும்
மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்
மரு°உ பெண்ணாசை மறக்கவே வேண
ஒரு முறை திருநாவுக்கரச பெருமானும், திருஞானசம்பந்த பெருமானும் சேர்ந்து பல்வேறு திருக்கோயில்களில் தம்முடைய இறைப்பணிகளை முடித்துவிட்டு, இன்றைய நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருமறைக்காடு திருக்கோயிலை வந்தடைந்தனர். அவர்கள் இருவரும் நேரம் தாழ்ந்து வந்தமையால், திருக்கோயிலின் நடை அடைக்கப்பட்டுவிட்டது.
அவர்கள் இருவரும் வேறு எங்கும் செல்ல விழையாது இறைவன் சிவபெருமானிடமே தம் அருட் பாக்களால் மன்றாடி திருக்கோயிலின் கதவுகளைத் திறக்க வைக்க முடிவெடுத்தனர். திருஞானசம்பந்த பெருமான் ஒரே ஒரு பாடல் பாடியவுடன் இறைவன் மனமுவந்து திருக்கோயிலின் கதவுகளைத் திறந்தார்.
இருவரும் மகிழ்ச்சியுடன் திருக்கோயிலுக்குள் செ
திருஞானசம்பந்த பெருமான் தம்முடைய மு°ன்றாம் அகவையிலிருந்தே சிவத்தொண்டு புரியும் பொருட்டு பல்வேறு சிவன் கோயில்களுக்குத் தம் தந்தையார், சிவபாதயிருதயர், அவர்களின் தேளில் பயணம் செய்தும், தாமே காலால் நடந்தும் சென்றார்கள். முற்றிலும் ஞானம் பெற்ற அருட் குழந்தையான திருஞானசம்பந்தரின் பிஞ்சுக் கால்கள் அல்லலுறுவது கண்டு இறைவன் தாமே சிவகனங்களிடம் திருஞானசம்பந்தர் பயணம் செய்வதற்காக முத்துப் பல்லக்கினை பரிசாக அளித்தார்.
இறைவன் அளித்த முத்துப் பல்லக்கினால் திருஞானசம்பந்தர் பல திருக்கோயில்களுக்குச் சென்று இறைவனைப் போற்றி தேனினும் இனிய தேவாரப் பாடல்களைப் பாடினார். ஒருமுறை வேலூரிலில் தங்கி இருந்த போது திருவண்