ஆடம்பரமின்றி அண்ணாமலையானை வணங்க வேண்டும்

திருஞானசம்பந்த பெருமான் தம்முடைய மு°ன்றாம் அகவையிலிருந்தே சிவத்தொண்டு புரியும் பொருட்டு பல்வேறு சிவன் கோயில்களுக்குத் தம் தந்தையார், சிவபாதயிருதயர், அவர்களின் தேளில் பயணம் செய்தும், தாமே காலால் நடந்தும் சென்றார்கள். முற்றிலும் ஞானம் பெற்ற அருட் குழந்தையான திருஞானசம்பந்தரின் பிஞ்சுக் கால்கள் அல்லலுறுவது கண்டு இறைவன் தாமே சிவகனங்களிடம் திருஞானசம்பந்தர் பயணம் செய்வதற்காக முத்துப் பல்லக்கினை பரிசாக அளித்தார்.

இறைவன் அளித்த முத்துப் பல்லக்கினால் திருஞானசம்பந்தர் பல திருக்கோயில்களுக்குச் சென்று இறைவனைப் போற்றி தேனினும் இனிய தேவாரப் பாடல்களைப் பாடினார். ஒருமுறை வேலூரிலில் தங்கி இருந்த போது திருவண்ணாமலைக்குச் செல்ல விழைந்தார்.

அப்போது கள்ளர்கள் நால்வர் வந்து அவரின் முத்துப் பல்லக்கை பறித்துச் சென்றனர். இறைவன் தமக்களித்த முத்துப் பல்லக்கு பறிபோனதை எண்ணி சம்பந்தர் பெருமான் பெரிதும் வருந்தினார், அப்போது பிறப்பறுக்கும் ஈசனின் குரல் வானத்தில் பின்வருமாறு ஒலித்தது, "சம்பந்தா! முத்தப் பல்லக்கினை எம் ஆணையின் படி களவாடியவர்கள் எம் சிவகனங்களே. ஏனெனில், யார் ஒருவர் திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் எம்மை வணங்க வந்தாலும் எவ்வித ஆடம்பரமுமின்றி எளிமையாகத் தான் வர வேண்டும். அவ்வாறு எளிமையாக திருவண்ணாமலைக்கு வருபவர்க்கே யாம் அருள்வோம். நீ திருவண்ணாமலையை வணங்கியவுடன் முத்துப் பல்லக்கு மீண்டும் உன்னை வந்தடையும்".

ஆதலால் தான் பல நூறு திருக்கோயில்கள் மேல் தேவாரப் பாடல்களை பாடிய எம் திருஞானசம்பந்த பெருமான், திருவண்ணாமலையின் மீது பாடும் போது மட்டும் தான், "அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வண்ணம் அறுமே!" என்றார்.

எழுதியவர் : (21-Jan-18, 11:21 am)
பார்வை : 146

மேலே