இளமை காலம்

இளமை காலம்

"இளமை" முடியும் தேதி எதுவென்று முழுமையாக தெரியாத மனிதனின் வாழ்க்கையில் பதிமூன்று வயது முதல் பத்தொண்பது வயது வரை உள்ள ஒரு அளவான பருவகாலம். இதனை கடக்காதவர்கள் வாழ்க்கையில் கடைசி விளிப்பிற்கு செல்ல முடியாது. இத்தருணத்தில் பலர் இப்பொழும் இன்பத்தை தரும் காலம் என்று இனிமைக்கொள்ளும் காலம் இளமை காலம் தான். அதனை நானும் கடந்து வந்துள்ளேன். அதை இன்று உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.

"இளமை காலம்" அனைவரும் ஆசைக் கொண்டு அனுபவிக்கும் ஒரு காலம் கொண்டது. "வறுமை" (ஏழை) பிறப்பே வேண்டாம் என்று வெறுக்கும் ஒரு சிறப்பு இதற்கு உண்டு. இது இரண்டும் கலந்த என் வாழ்க்கையை வாசிக்கின்றேன். கேளுங்கள்.

காலங்கல் பலவிதமாய் மாறும். மாறலாம். அதிலும் மாறாது என்போல் சிலரின் கண்ணீர். அது இந்த இளமை காலங்களிலும் சற்று மூழ்கடித்துக்கொண்டு வந்தது. அழகான ஒரு பருவத்தில் அளவாக அரும்பும் ஒரு மீசை. அதை முழுவதுமாக மழிக்க மனம் இருக்கும். ஆனால் அதை மழிக்க பணம் இல்லை.

"அன்பின் வடிவமாக உருவாகும் காதல். உள்ளம் உரிமையை இன்னொரு உள்ளத்திடம் கொடுக்க ஏங்கும் காலம். அதை முழுமையாக அனுபவிக்க ஆசை தோன்றும் முன்பே "ஏழை என்ற எந்நிலை எனக்கே என்னை யார் என்று காட்டிவிட்டது. விருபங்கள் என்போல் சிலருக்கு விளையும் போதே அதையெல்லாம் வெறுப்புகள் அறுவடை செய்துவிடுகின்றது. "பருவ காலங்கள்" முழுமையாக பத்து ஆண்டுகள் கூட இல்லை. ஆனால் அதில் பட்ட துன்பங்களை சொல்லினால் எதிர் காலத்தின் பாதி காலங்கள் போய்விடும்.

கனவுகளுக்கு யாராலும் வேளியிட முடியாது. அதனால் தான் என் கண்களை மூடாமல் வேளிகளை இட்டேன். ஆசைகளை கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் என்னை காயப்படுத்திக் கொள்ள முற்பட்டேன். சாதாரணம் என்னும் வாழ்க்கையில் சாகடிக்கும் பல இரணங்கள் என் பருவத்தை கொலை செய்துவிட்டது. "மனதில் அமைதி நீங்கி என்றோ இறந்துபோன பின்பும் கடமைக்காக சில உடமைகளை சுமந்து நடமாடிக் கொண்டிருந்தேன்.

வாழ்க்கையின் கடைசி எல்லைக்கு சென்ற பின்பு பலர் மீண்டும் ஒருமுறை திரும்பி பார்க்க வேண்டும் என்று விரும்பும் காலமும் இளமை காலம் தான். என்போல் பலர் இனி ஒருமுறை திரும்ப வேண்டாம் என்று வெறுக்கும் காலமும் இளமை காலம் தான்.


( எத்தனையோ இன்னல்கள் என்னை சூழ்ந்து நின்ற போதும் அதையெல்லாம் சுகமாக மாற்றியது நட்பு. அதற்கு நன்றி சொல்ல என்றும் நான் கடமைபட்டேன். ஆனால் நன்றி என்ற ஒற்றை வார்த்தையை சொல்லி வேறுபடுத்த முடியாது.)

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந� (22-Jan-18, 8:22 pm)
Tanglish : ilamai kaalam
பார்வை : 685

மேலே