கடைசி நாள்

ஒரு இயற்க்கையின் தொகையில் ஒரு ஆடம்பரமான குடில் அமர்ந்திருப்பது போல இருந்தது அந்த கல்லூரி . அதன் முகப்பில் ஒரு அரண்மனைக்குள் நுழைவது போன்ற மாய தோற்றம் இருந்தது . அழகான மழை சாரலில் ,பறவைகளும் ,பட்டாம் பூச்சிகளும் சந்திக்கும் சரணாலயமாக அமைந்திருந்தது அந்த கல்லூரி .

நவகிரகம் போல அந்த உயிர் வேதியல் வகுப்பில் இருக்கும் ஒன்பது பேரும் அப்படித்தான்.

கார்த்திக் ஆரம்பித்தான் ," ஏன்டா ' சிவா' எல்லாரும் எழவு வீட்டுல இருக்கற மாதிரி மூஞ்சிய தொங்கபோட்டுட்டு இருக்கீங்க , என்ன ஆச்சி , இன்னிக்கு கட்சி நாள் தான் அதுக்காக ..."

யாரும் பதில் பேசாமல் மௌனம் காட்டினர்.
அந்த வகுப்பில் ஐந்து ஆண்கள் , நான்கு பெண்கள் .

வகுப்பு ஆசிரியை சசிகலா , வகுப்பிற்குள் நுழைந்தால் .அன்னைவரும் எழுந்து நின்று மரியாதையை செய்தனர்.

சசிகலா அவர்களது உயிர்வேதியல் ஆசிரியை , ஒல்லியான உடல்வாகு ,மாநிறம் எப்போதும் சிரித்த முகம் .அகண்டு விரிந்த கண்கள் . ஒரு பாரஃபி பொம்மைக்கு புடவை சுற்றியது போல உடை. தன்னுடைய பேச்சில் எப்போதும் ஒரு காந்தம் இருந்துகொண்டே இருக்கும்.அவளுடைய வயதை யாரும் கணக்கிட முடியாது.

வகுப்பில் பத்து நிமிடமாக மௌனம் குடியேறி இருந்தது. மௌனத்தின் கணம் தாங்காமல் சுவர்கள் விரிசலை எதிர்கொண்டது . அப்போதும் ஜன்னல்களில் தங்களை புகுத்திக்கொண்டு அந்த வகுப்புக்குள் இசை பாடிக்கொண்டிருந்தது காற்று.

சசிகலா தொடங்கினாள். "என்னாச்சு ஏன் இப்பிடியிருக்கிங்க . எதுவுமே யாராலும் மாத்த முடியாது நடக்கறது கண்டிப்பா நடந்து தான் ஆகும்.

சரி பாடத்துக்கு போகலாம் . "

எல்லோரும் அவர்களது புத்தகத்தை திறந்தார்கள் .

சசிகலா கார்த்திக்கிடமிருந்து தன் பார்வையை விலக்கியே வைத்திருந்தால்.

கரும்பலகை , ஒப்பனை கொஞ்சம் அதிகமானதை போல சாக் பீசில் தன் முகத்தை மறைத்திருந்தது .

"மேடம் அந்த' சி ' பக்கத்துல ஒரு பாண்ட் போட்டு இருக்கீங்களே அது என்ன பாண்ட்" ...என்றான் கார்த்திக்
அது கொவேலன்ட் பாண்ட் .... மனுசனா மாதிரி திடிர்னு ஏமாத்திட்டு போற பாண்ட் கிடையாது அது தன் இரண்டு அணுக்களை பிரியமா பாத்துக்குது.

"மேடம் ....அஹ்ஹ்ஹ ...ஆஹ்ஹஆ.... இங்கபாருங்க மேடம் இந்த கோவிந்தராஜ் ஜேம்ஸ் போன்டானு கேக்கிறேன் ..." கார்த்திக் சொல்லி தன்னைத்தானே சிரித்த கொண்டான்.

ஒருவர் உதட்டிலும் சிரிப்பிற்கான சுவடு தெரியவில்லை .

சசிகலா ஒரு சின்ன புன்முறுவலுடன் .".ஏன் கோவிந்தராஜ் இப்படியெல்லாம் கேள்விகேக்கற" என்றாள்.

அதற்க்கு கோவிந்தராஜ் எதோ ஒரு உலகத்தில் இருந்து எழுப்பியதை போல, எந்த வார்த்தையை போட்டு பேசுவது என்று தெரியாமல் .. தலையை தாழ்த்தி கொண்டான்.

இது எல்லோரையும் சிரிக்க வைக்க எப்போதும் கார்த்திக் பயன்படுத்தும் யுக்தி என்று அனைவரும் அறிந்ததே.

சசிகலா சற்று குரலை உயர்த்தி , "வாஞ்சி புரிஞ்சுதா" என்றால்

அதற்க்கு வாஞ்சி என்ற வஞ்சியநாதன் , "என்னக்கு ஒன்னும் புரியல மேடம் எப்படி இப்படியெல்லாம் ஒன்னும் புரியல மேடம் ..." என்றான்

அதற்க்கு கல்பனா , "இங்க பாரு வாஞ்சி எல்லாமே யாருக்கும் புரியாது , நாமதான் புரிஞ்சிக்க ட்ரை பண்ணுனும்"

"அடடா ஒரு பாண்டுக்கு இதனை விளக்கமா ...விடுங்கப்பா ஆள் ஆளுக்கு தத்துவம் பேசாதீங்க
நடப்பது நன்றாக நடக்கும்" ...என்று அவன் பாணியில் சொல்லி முடித்தான். சிவா

கருணாம்பிகை உதட்டு ஓரத்தில் புன்னகைத்தாள் .

கார்த்திக்கை ஒரு நிமிடம் அவன் பார்ப்பதற்கு முன் பார்த்துவிட்டு திரும்பினாள் ..சசிகலா

இடைவேளை மணி ஒலித்தது ...

"மச்சான் உனக்காக தயிர் சாப்பாடு கொண்டு வந்திருக்கேன் ...
சாப்புடு ..." என்றான் சிவா



"ஓகே மப்புல கண்டிப்பா "

என்றான் கார்த்திக்

"நானும் உனக்கு புடிச்சத கொண்டு வந்திருக்கேன் ..என்றாள்" கீதா ராணி தன அடி தொண்டையில் .

"ஓகே கண்டிப்பா .." என்றான் கார்த்திக்

"டேய் கிப்சன் , பாக்கிய இங்க வாங்க ஷேர் பண்ணிக்கலாம் .."என்றான் கார்த்திக் உற்ச்சாகத்துடன்..
எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து உணவு அருந்தினார்கள்
அந்த இடம் ஒரு விதமான சந்தோசத்தை நிரப்பி இருந்தது ..
காற்றுக்கு கூட இடைவெளி இல்லாமல் ஒரு நெருக்கம் சூழ்ந்திருந்தது அங்கு . அந்த நாள் ஒரு வரம் வாங்கி வந்த நாளாக எல்லோர் கண்களிலும் வழிந்தது . எதோ ஒரு இழப்பு காத்திருப்பது போல உணர்கிறது அந்த கூட்டம் . எது நடந்தாலும் சற்று காலத்தை நிறுத்தி , மற்றதை துரத்தி விடலாம் என்ற தீர்க்கம் அவர்களிடத்தில் இருந்ததது .

திரும்பவும் இடைவெளி முடந்ததும் சசிகாலா உள்ளே நுழைந்தால் .

திரும்பவும் ஒரு மயான அமைதி குடியேறியது

எப்போதும் கலகலப்பாக பேசி அன்பை தூவி செல்லும் சசிகலாவை மரியாதை கலந்த தோரணையில் ரசிப்பான் கார்த்திக் ..சசிகலாவின் மீது ஒரு ஆசிரியருக்கான மரியாதையை கொடுக்க கார்த்திக் எப்போது தவறியது இல்லை.
இன்று அந்த சூழல் இல்லாததால் அவனும் பெரிதும் எதிர்பார்க்கவில்லை.

படிங்க எதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்க என்றால் சசிகலா

நேரம் ஓட ஓட திடிரென்று இதயம் துடிப்பை நிறுத்தி விடுமோ என்ற அச்சத்தின் வெப்பம் அங்கே உணர முடிந்தது .

இது வரை பேசாமல் இருந்த கோவிந்தராஜ் ...

"என்னடா கார்த்திக் எப்படி உன்னால சகஜமா இருக்க முடியுது ..."

நமோ காலேஜ் முடிச்சு பதினாலு வருசமாச்சு ........எல்லோரும் ஒரு நாள் காலேஜ் வரணும்னு நம்ம மேடம் சொன்னப்போ எல்லோரும் பெருசா சந்தோச பட்டோம் ... ஆனா உன்னக்கு வந்திருந்த புற்று நோய் உன்ன அடுத்த வராம் கொண்டுபோயிரும்னு தெரிஞ்சு கடைசியா எங்களை எல்லாத்தையும் பழைய மாதிரியே பாக்கணும்னு சொல்ல எப்படி டா மனசு வந்துச்சு ... "என்று சொல்லி முடிப்பதற்குள் ... ஒரு பலத்த அழுகை ஓலம் அங்க மிரட்டியது .
ஒன்பது பேரின் கண்கள் கடலென திரண்டது .அது வரை அமைதி காத்த மௌனம் இந்த நொடி முதல் தன் இன்னோரு கோர முகத்தை கட்ட ஆரம்பித்தது .

"என்னால மூடியுள்ள கார்த்திக் இவங்ககிட்ட சொல்ல வேண்டாம்னு தான் நினைச்சேன் ஆனா நீ வரதுக்கு முன்னாடியே சொல்லிட்டேன் " என்று சொல்லி தன் வாழ்நாளில் உள்ள மொத்த கண்ணீரையும் கொட்டி தீர்க்காமல் நின்றிருந்தாள் சசிகலா .
தன் மரணத்தின் பக்கங்களை நிரப்பிய சந்தோஷத்தில் , கார்த்திக் கண்களில் நீர் வடிந்தது .
இன்று அவர்களுக்காகவே திறக்கப்பட்ட கல்லூரி , ஒரு நிசப்தத்தை சுவாசித்து கொண்டு இருந்தது . இலைகள் உதிர்ந்தது ...........மரங்கள் போதித்து நின்றது ....

எழுதியவர் : (22-Jan-18, 8:23 pm)
Tanglish : kadasi naal
பார்வை : 443

மேலே