வில்லா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  வில்லா
இடம்
பிறந்த தேதி :  21-Dec-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Mar-2013
பார்த்தவர்கள்:  104
புள்ளி:  10

என்னைப் பற்றி...

சராசரி மாணவன்.

என் படைப்புகள்
வில்லா செய்திகள்
வில்லா - எண்ணம் (public)
06-Jun-2022 4:20 pm

மனிதமொன்று தோன்றி 

மாதங்கள் சிலவாகி 
அடியெடுத்து
நடைநடந்து 
முணுமுணுத்து
வாய் சிரிக்கும்  மழலைகண்  
கையிடை நீரும்
ஈறிடை மொழியும் 
செயலிடை புதுப்பெண்ணும் 
படும் பாடு
பாரினில் பழுதும் பாழாகுமே!!

மேலும்

வில்லா - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jan-2019 11:37 pm

சில மாதங்கள்,
சிறை வைத்து சிரித்திட்டாள்,
குறை இன்றி பெற்றெடுத்தாள்.
வலி மட்டும் அவள் கொண்டாள்.
வழி நெடுக அவள் சுமந்தாள்.

என் இதயம் துடிக்கும் முன்னே,
எனக்காய் துடித்த ஓர் இதயம் - அவள்.
தன்னிடத்தில் புயல் வரினும்,
என்னிடத்தில் வந்த வெயில் கண்டு
கோபம் கொண்டவள் - அவள்.

எவர் எவர்க்கு என்னென்ன தேவை
என்று தானறிவாள் - அவள்
தன் தேவை என்னென்று என்றறிவாள்?

என் சோகம் என்னென்று
செவியறிய பலருண்டு,
உன் நிலைமை இதுவென்று
மனமறிய அவளுண்டு.

கோபத்தில் முகம் கொண்ட ,
கொஞ்சும் பாச உளம் கொண்ட,
நெஞ்சத்தை அறிந்திடுமோ - உந்தன் உலகம்
விஞ்சும் அந்த பேரன்பை...

மேலும்

வில்லா - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Apr-2016 8:09 pm

பெண்ணே!
தேவதைகளின் ரசிகன் நான்...
தவறாய் கொள்ளாதே நீ தேவதை என்று,
ஏனென்றால்
.
.
.
.
.
தேவதைகள் எல்லாம் உனக்கு ரசிகைகள்...

மேலும்

அழகான ரசிப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Apr-2016 9:18 am
வில்லா - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Feb-2016 1:27 am

தன் வரிகள் அழிந்தும்..,
என் வரிகளை அழியாமல்
பாதுகாத்துக் கொண்டது,,,
- நோட்டு புத்தகத்தில் என் கவிதை..

மேலும்

வில்லா - வில்லா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Jul-2015 3:42 am

பேசாதே!!!
பேசாமல் சாகடிக்கும் தேவதையே !
பேசாதே !!!



நீ பேசினால் ...
ஆறாயிரம் டிகிரி சூரியனும்
அரை நொடியில் பனித்துளி ஆகிவிடும்
பேசாதே !!!

நீ பேசினால் ...
சூடான புதனும்
சூனியம் வைத்தாற்போல்
குளிர்ந்து விடும்
பேசாதே!!!

நீ பேசினால் ...
செவ்வாய் வாசிகளும் - உன்
செவ்வாய் வாசிப்பிற்கு
செயற்கைகோள் ஏறிவிடுவர்
பேசாதே !!!

நீ பேசினால்...
பிளக்கப்பட்டு கொண்டுஇருக்கும்
புலோகமும் புதிதாய்
பூத்து குலுங்கி விடும்
பேசாதே !!!

நீ பேசினால் ....
துள்ளி குதித்து வரும்
வெள்ளியும்
பள்ளியறை செல்லாமல் காத்திருக்கும்
பகல் எல்லாம்..
உன் பேச்சிற்கு ...

குருவான வ

மேலும்

நன்றி தோழரே ... 05-Jul-2015 1:06 am
அறிவியல் பூர்வமான கவிதை அதே சமயம் அறிவு பூர்வமான கவிதை... மிக சிறப்பு தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 04-Jul-2015 10:36 pm
மேலும்...
கருத்துகள்

மேலே