தாய்மை

சில மாதங்கள்,
சிறை வைத்து சிரித்திட்டாள்,
குறை இன்றி பெற்றெடுத்தாள்.
வலி மட்டும் அவள் கொண்டாள்.
வழி நெடுக அவள் சுமந்தாள்.

என் இதயம் துடிக்கும் முன்னே,
எனக்காய் துடித்த ஓர் இதயம் - அவள்.
தன்னிடத்தில் புயல் வரினும்,
என்னிடத்தில் வந்த வெயில் கண்டு
கோபம் கொண்டவள் - அவள்.

எவர் எவர்க்கு என்னென்ன தேவை
என்று தானறிவாள் - அவள்
தன் தேவை என்னென்று என்றறிவாள்?

என் சோகம் என்னென்று
செவியறிய பலருண்டு,
உன் நிலைமை இதுவென்று
மனமறிய அவளுண்டு.

கோபத்தில் முகம் கொண்ட ,
கொஞ்சும் பாச உளம் கொண்ட,
நெஞ்சத்தை அறிந்திடுமோ - உந்தன் உலகம்
விஞ்சும் அந்த பேரன்பை...

எழுதியவர் : வில்லா (7-Jan-19, 11:37 pm)
சேர்த்தது : வில்லா
Tanglish : thaimai
பார்வை : 178

மேலே