தாய்
இறைவன் ஒருநாள்
காணப்பெற்றான்
கண்டதும் வணங்கிட
கண்களும் நிரம்பிட!
வா, கடந்துவருவோம்
உன் கடந்தக்காலத்தில்!
கடக்கும் பொழுது
எத்தனை முறை
எண்ணற்ற முறை
நான் உன்னருகில்
என்னுருவில்
கணக்கில்
கொள்ளென்றான்!
எனை உள்ளிழுத்து
ஓர் இருட்டறையில்
என்னுடன் ஓர்
உயிரைக்கட்டி
உறிஞ்சு உன்னுதிரம்
என்றான்!
துவுங்கு
இவளிடமிருந்து
உன் கணக்கு என்றான்!
இவள் உன்னில்
யாரென்றேன்?
என்னிலில்லை அவள்,
அவளிடமே நானென்றான்!
இனி அடுத்து என
இறைக்கூற
போதும் நிருத்து!
நீயே இவளிடம் எனில்
இறைவா!
நீயே தேவையில்லை
இனியென்றேன்!