மனிதமொன்று தோன்றி மாதங்கள் சிலவாகி அடியெடுத்து நடைநடந்து முணுமுணுத்து...
மனிதமொன்று தோன்றி
மாதங்கள் சிலவாகி
அடியெடுத்து
நடைநடந்து
முணுமுணுத்து
வாய் சிரிக்கும் மழலைகண்
கையிடை நீரும்
ஈறிடை மொழியும்
செயலிடை புதுப்பெண்ணும்
படும் பாடு
பாரினில் பழுதும் பாழாகுமே!!