எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நிசப்தமான பின்மாலை பொழுது சுகமான குளிர் காற்று நிலமெங்கும்...

நிசப்தமான பின்மாலை பொழுது

 சுகமான குளிர் காற்று 

நிலமெங்கும் மண் வாசனை 

அதனோடு அவள் கூந்தல் வாசனை 

மென்மையான பட்டு மடியில் தலைவைத்தே 

வானத்து நிலவு அழகா என்னவள் முகம் அழகா 

எத்தனை போராட்டம் முடிவெடுக்க முடியவில்லை 

நிலவை சுற்றி நட்சத்திரங்கள் மின்மினுக்க நிலவு தான் அழகோ என்று தோன்ற என் நெஞ்சில் கைவைத்து என்இதய துடிப்பிற்கேற்ப என் தலைகோதி கொண்டிருந்தாள் அவள் என்ன என செய்கையில் கேட்க அமைதியும்ஆனந்தமும் காதலுமாய் ஒரு சிறு புன்னகை நான் மட்டும் அல்ல நிலவும் என்னோடு தோற்றுவிட்டது மேகத்துள்ஒழிந்து கொண்டது … குழந்தையாய் ,காதலனாய் ,கணவனாய் மரண படுக்கையிலும் எந்நிலைதனிலும் அவள்மடி விழித்துக்கொண்டே காணா காணும் பேரானந்த தொட்டில் 

                                         விக்னேஷ் குமார் 

நாள் : 6-Jun-22, 8:35 am

மேலே