நீ பேசினால்

பேசாதே!!!
பேசாமல் சாகடிக்கும் தேவதையே !
பேசாதே !!!



நீ பேசினால் ...
ஆறாயிரம் டிகிரி சூரியனும்
அரை நொடியில் பனித்துளி ஆகிவிடும்
பேசாதே !!!

நீ பேசினால் ...
சூடான புதனும்
சூனியம் வைத்தாற்போல்
குளிர்ந்து விடும்
பேசாதே!!!

நீ பேசினால் ...
செவ்வாய் வாசிகளும் - உன்
செவ்வாய் வாசிப்பிற்கு
செயற்கைகோள் ஏறிவிடுவர்
பேசாதே !!!

நீ பேசினால்...
பிளக்கப்பட்டு கொண்டுஇருக்கும்
புலோகமும் புதிதாய்
பூத்து குலுங்கி விடும்
பேசாதே !!!

நீ பேசினால் ....
துள்ளி குதித்து வரும்
வெள்ளியும்
பள்ளியறை செல்லாமல் காத்திருக்கும்
பகல் எல்லாம்..
உன் பேச்சிற்கு ...

குருவான வியாழனும்
சீடன் ஆகிவிடும் ...
பேசாதே !!!

நீ பேசினால்
வட்டம் போட்ட சனியும்
உன் பேச்சை கொள்ளையிட
திட்டம் போடும்
பேசாதே!!!

நீ பேசினால் ...
புளுட்டோவோ, நேப்டியுனோ , யுறேனஷோ
எல்லாம் ஆகிவிடும் பிரிஷ்ணஷ்.
பேசாதே !!!

என்றெல்லாம் எண்ணித்தான்....
தான் படைத்த இந்த பிரம்மாண்ட
பேரண்டம் தன்னகத்தே தழைத்திருக்க
உனக்கு மட்டும் விழியில் ஓர் மொழி சேர்த்து
குரல் இல்லாகுறை வைத்து
படைத்தானோ
இறைவன்......

எழுதியவர் : வில்லா (4-Jul-15, 3:42 am)
Tanglish : nee pesinal
பார்வை : 83

மேலே