Shreekar R Rao - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Shreekar R Rao |
இடம் | : திருச்சி |
பிறந்த தேதி | : 18-May-2001 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 55 |
புள்ளி | : 15 |
ஊர் :
தலைசிறந்த மாநிலம்-தமிழ்நாட்டின்
தலைநகரம்-சென்னையில்
பிறந்தேன் இந்த அழகிய
கவிதை ரசிகன் ஸ்ரீகர்.
பெற்றோர்:
தாஞ்சாவூரிலிருந்து தந்தையர்
சென்னையிலிருந்து தாயார்,
பெயரோ ரகோத்தமன் லதா
என்னை இரண்டாவதாக பெற்றார்.
தமக்கை:
சினிமா பட்டு ரசிக்கும்
என் அக்கா, அழகியத்
தாய்ப் பிரியமானவள் ,
இவள் பெயரோ ஷ்வேதா.
நான்:
இரண்டாவதாக பிறந்தேன்,
கவிதை ரசிகன் நான்!
வீட்டின் செல்லப் பிள்ளை,
நான் பள்ளி பிரியன்!
பற்று:
காதல்கீதபிரியன் நான்,அதை
விட்டுக்கொடுக்கவே மாட்டேன்!
தாய்நாட்டை முதலாம் இடத்துக்கு
கொண்டு வருவது என் லட்சியம்!
நட்பு:
ஆறாம் வகுப்பிலிருந்து
தெரிந்தவன் இவன்,
எல்லாவற்றிலும்
எனக்கு நிழல் போல்!
பாலாஜி என்ற பெயரில்
எனக்கு அந்த பாலாஜி போலவே!
இவன் நிழல் போல்,எதிலும்
என்னை விட்டுக்கொடுக்கவே மாட்டான்!
பாக்கள் புனைந்தாக்கம் விளைத்திடும்
நல்லான் கவிவல்லான் அபியினை
சொல்லால் ஒருசொல்லால் புகழ்வது - சரியாமோ?
பண்ணால் பலமின்னல் படைத்திடும்
பொன்னான் எனதண்ணான் புகழினை
சொன்னால் அதுஎன்னால் முடிந்திடும் - செயல்தானோ ?
அல்லா புகழ்சொல்லால் வடித்தனன்
சொல்லா கவிஎல்லாம் எழுதினன்
எல்லை எதுமில்லா கவியிவன் - பெயர்வாழ்க
சொத்தாய் தமிழ்முத்தாய் இருப்பவன்
வித்தாய் பலவித்தை அறிந்தவன்
சித்தன் இனிசத்தாய் இருந்திட - அருள்தாராய் !
இன்னும் இவன்மின்னும் வகையிலே
இன்பம் பிறரன்பும் கிடைத்திட
பொன்னாய் அருள்தன்னால் வழங்கிடு - பெருமானே
-விவேக்பாரதி
கவிதரும் இன்பக் கவிதரும் சந்தம் கனிவுதரும்
சுவைதரும் வார்த்தை சுதிதரும் பாட்டில் மரபுதரும்
புவிதரும் பாட்டும் புகழ்தரும் வாழ்த்தைப் பொதிந்துதரும்
அவைதரும் மாலை விவேக்பா ரதிக்கென் இசைதருமே
மழை!மழை!, குளிர்
கொண்டு வரும் மழை !
பூமி , நாடு அனைத்தும்
காத்திருப்பது மழைக்காக !
நாடு செழிக்க ,பயிர் செழிக்க,
சுட்டு கொளுத்தும் வெயிலை ஒழிக்க,
வா!வா! மழை! வா!வா!
ஸ்ரீகர் ர ராவ்
தீபாவளி என்றாலே வெடி மட்டும் அல்ல !
தீ என்பது மனதில் உள்ளது!
தீபம் ஏற்றி அதை அழிப்போம்
தீய சக்தியை முற்றிலும் அழிக்கலாம்!
தீய சக்தியுள்ள நரகாசுரன்
தீ என்ற சூழ்ச்சி வைத்து தான்
தீய சக்தியை அழித்தான்
தீமையை அழிக்கும் மாயகண்ணன்!
அகங்காரத்தை அழித்தான்
அயொத்யவாசீ ராமன்!
அந்நாளில் தான்
அழகாகக் கொண்டாடுகிறோம் தீபாவளி என்று!
அண்டத்தை அழுக்காக்கும் வெடி
அழகுக்கும் சாஸ்திரத்துக்கு மட்டும் போதுமே!
அவ்வேடிக்கான செலவை
அம்மாவுக்கு சமர்பிப்போமே!
ஸ்ரீகர் ர ராவ்
யோசித்து பார்ப்போமே!
நாளைய உலகம்
எப்படி இருக்குமென்று ?
ஒன்றுமே இல்லை
இப்போதைய தொழில் நுட்பத்தை
விட
சிறிதளவு அல்ல
பெரிதளவு மாறும்
இப்போதைய பட்டன்
அலைபேசி நாளை
ஸ்மாட் போனாக
மாறும்,
இன்றைய கணினிகள்,
நாளை டேப்லேட்டாக
,
இன்றைய மனிதர்கள்
கூட ரோபோவாக
மாறிவிடுவார்கள் போல .
பார்ப்போம்!
பொறுத்திருந்து பார்போம்!
ஸ்ரீகர் ர ராவ்
மேகம்!மேகம்!
தலையின் மேல் எப்போதும் மேகம் !
அது மழையோ ,வெயிலோ !
மழைக்கலமன்று இருப்பது கருமேகம்,
வெயில்காலமன்று இருப்பது வெண்மேகம்
மேகமே! மேகமே!
நீ மழையாக வருவாயோ,அல்ல
பணியாக வருவாயோ!
எனக்கு வேண்டிய ஒன்று,
நீ பூமி செழிக்க வந்துவிடு
ஸ்ரீகர் ர ராவ்
மழை!மழை!, குளிர்
கொண்டு வரும் மழை !
பூமி , நாடு அனைத்தும்
காத்திருப்பது மழைக்காக !
நாடு செழிக்க ,பயிர் செழிக்க,
சுட்டு கொளுத்தும் வெயிலை ஒழிக்க,
வா!வா! மழை! வா!வா!
ஸ்ரீகர் ர ராவ்
அவள் பேசமாட்டாள் என்று மூளை சொல்லும்
அவள் பேசுவாள் என்று இதயம் சொல்லும்
குழப்பங்கள் உன்னை தெளிவாய் கொல்லும்
இறுதியில் நீ அழுகிறாய் என்று உன் கண்ணீர்
சொல்லும்
ஸ்ரீகர் ர ராவ்