அபி திருப்புகழ்
பாக்கள் புனைந்தாக்கம் விளைத்திடும்
நல்லான் கவிவல்லான் அபியினை
சொல்லால் ஒருசொல்லால் புகழ்வது - சரியாமோ?
பண்ணால் பலமின்னல் படைத்திடும்
பொன்னான் எனதண்ணான் புகழினை
சொன்னால் அதுஎன்னால் முடிந்திடும் - செயல்தானோ ?
அல்லா புகழ்சொல்லால் வடித்தனன்
சொல்லா கவிஎல்லாம் எழுதினன்
எல்லை எதுமில்லா கவியிவன் - பெயர்வாழ்க
சொத்தாய் தமிழ்முத்தாய் இருப்பவன்
வித்தாய் பலவித்தை அறிந்தவன்
சித்தன் இனிசத்தாய் இருந்திட - அருள்தாராய் !
இன்னும் இவன்மின்னும் வகையிலே
இன்பம் பிறரன்பும் கிடைத்திட
பொன்னாய் அருள்தன்னால் வழங்கிடு - பெருமானே
-விவேக்பாரதி