தாய் மொழி வழி கல்வி

*
வா தோழாவா
நமது தாய்மொழியில்
இருக்கும் பக்கங்களை திருப்புவோம்
*
தமிழின் முதற்காப்பியம்
தொல்காப்பியம் மண்ணில் புதைத்தாலும்
புகழ் புழுயென வாழும்
*
வள்ளுவன் குறள் என்னும் நூலால்
எந்த காலத்திலும் எந்த நேரத்திலும்
அணியும் பாரம்பரியம் மிக்க உடையை
நெய்து விட்டு சென்றான்
*
கம்பன்
தேடியும் கிடைக்காத முத்து
அவனது ராமாயணம் இன்று
பல தொலைக்காட்சிகளின் சொத்து
*
இளங்கோ பொறுமையாக கதை சொன்னான் அதில்
ஒரு கருங்குயிலின் சோகமான கானத்தை சொன்னான்
சிறு நெருப்பு பொறியையும் வைத்தான் குயிலின்
சிறகினிலே
*
இவன் கவிதைக்கு சாரதி
தனது பாடலால் சுதந்திரத்திற்கு
பட்டு உடுத்தினான் பாரதி
*
குறிஞ்சி நிலத்தில்
காதல் தோட்டத்தை உருவாக்கி
மலரையும்(தலைவி),வண்டையும்(தலைவன்)
தேடல் செய்யவிட்டான் கபிலன்
*
ஆறு தலைமுறையும் தலை நிமிர்ந்து வாழ
ஆறுதலாக தலையை தடவி விட்டார்
ஆறாம் திருமுறை மூலம் வள்ளலார்
*
ஒரு தாய் எப்படி அனைத்தும் தருகிறாளோ
அது போல தான் தமிழ் தாயும் மக்களுக்கு
தேவையானதை தருகிறாள்
*
எனவே தாய் மொழி வழி கல்வியும்
நமக்கு கண்கள் தான்
நம் தாய்க்கு முதலில் முத்தம் மிடுவோம்
*
நம் தாயை முதியோர் இல்லத்தில் சேர்த்து
பிற தாய்க்கு மரியாதையை செலுத்துதல்
எதற்கு.

எழுதியவர் : பன்னீர் கார்க்கி (பன்னீர் (20-Oct-14, 5:08 pm)
பார்வை : 235

மேலே