தோணுமே நெஞ்சில் களிப்பு - நேரிசை வெண்பாக்கள்

வெண்பா எழுதுவது எப்படி என்றுநீயே
கண்கலங்க வேண்டாம்; எதுகைமோனை - பண்பாக
வேயமைத்து வெண்சீர், இயற்சீ ருடன்தளை
யேயமைந்தால் வெண்பாவா கும்!

அருவியின் நீர்வீழ்ச்சி அற்புத(ம்) என்றால்
பெருகிய நீர்த்தேக் கமதன் - பெருமிதம்;
காணக்கண் கோடிதான் வேண்டுமே; கண்டபின்
தோணுமே நெஞ்சில் களிப்பு!

நாடகமே இவ்வுலகம் நாளை நடப்பதை
வேடமிட்டு ஆங்குதான் மண்சோறுண் - நாடக(ம்)
ஆடுவோர் எங்கணம் தானறிவார்? ஊழலின்றி
ஓடவும் வேண்டாமோ சொல்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Oct-14, 1:19 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 80

மேலே