Abimanyu - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Abimanyu
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  21-Sep-2017
பார்த்தவர்கள்:  31
புள்ளி:  13

என் படைப்புகள்
Abimanyu செய்திகள்
Abimanyu - பபூதா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jan-2018 8:15 am

பயிர்கள் உறிஞ்சி குடிக்கிறது
உயிர்கள் அடித்து சாப்பிடு கிறது
பறித்தும் சாப்பிடுகிறது

வயித்துபசிக்கும்
உடம்பு பசிக்கும்

அன்பா?
காதலா?
காமத்தால்

இதில்
சாகப்பட்சினி என்ன?
மாமிச பட்சினி என்ன?
அகிம்சை என்பது
அறவே இல்ல

பசியில்
உணவை சாப்பிடும் போதும்
உற்சாகம்
உடலை சாப்பிடும் போதும்
உற்சா கம்
திருப்தியான போதும்
போதும் என்று சோன்னதில்லை
பசியும் நின்றதில்லை

தொட்டு சாப்பிடா விட்டாலும்
கண்களால் சாப்பிட்டு விடுகிறோம்
காமத்தால்
கருத்தால் சாப்பிட்டு விடுகிறோம்
ஏக்கத்தால்

பசிக்கு முன்னால்
யாரும்பத்தினியுமில்லை
ராமனுமில்லை

பசிக்கு முன்னால்
கடவுளின் கால்களே தடுமாறு

மேலும்

பசி வந்தால் பத்தும் பறந்திடும். பசி இயற்கையின் உண்மை. ஆனால் தாயும் தாரமும் வேறல்லவா? அதனால் தான் ராமன் ஒருவனாய் இருக்கிறான் . தவறுகளை நியாயப்படுத்தும் பிதற்றல்கள். 17-Jan-2018 10:53 am
பசி இல்லையேல் உலகில் வளர்ச்சியே இருக்காது... பசிதான் அனைத்தையும் ஆள்கிறது... 'பசி' அருமை.. வாழ்த்துக்கள்.. 16-Jan-2018 10:02 am
Abimanyu - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Jan-2018 7:47 pm

மனிதா! என்னைப்பார் !
மண்ணில் ஒரு விதையாய் விழுந்தேன்.
சில காலம் உள்ளே தனித்து புழுங்கி இருந்தேன்.
ஆனாலும் நான் விழித்திருந்தேன்.
தாகமும் வெப்பமும் இருட்டும் அழுத்தமும்
என்னை சூழ்ந்திருக்க என்னுள் நானே
ஒரு முடிவெடுத்தேன்- ஒரு விருட்சமாய்
வளர முடிவெடுத்தேன்.
நீர் தேடி அலைந்தன என் வேர்கள்.
மூச்சுக்காக தவித்திருந்து
முட்டி மோதி தடைகளைத் தகர்த்தேன்.
இன்று காலத்தை வென்று
கவிதையாய் நிற்கிறேன்.
கர்வத்தில் இதை நான் சொல்லவில்லை.
அவமானமும் துக்கமும் தோல்விகளும்
உன்னைத் துரத்தும் போது
சற்றே நின்று என்னை உற்றுப்பார்.
என்னுள் உன்னைக் காண்பாய்!

மேலும்

Abimanyu - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Jan-2018 9:00 pm

குகைக்குள் உறுமும் மிருகம் போல
மனதுள் அலையும் என் கோபம்.
பாம்பின் படத்தில் உறையும் விஷமாய்
பல்லிளிக்கும் என் கோபம்.
அடுப்பணைந்த பிறகும் அடங்காத
ஆழ்மனதின் கோபம்.
தோல்விகளின் துரத்தல்களால்
தூங்காத என் கோபம்.
கையாலாகாத தன்னிலை கண்டு
கண்ணீரோடு போராடும்
கலங்கிய மனதின் கோபம்.
வாழ்வின் வாசல்கள் மூடிய போதும்
கலைந்து போன வானவில்லின் எச்சமாய்
இன்னும் துளி நம்பிக்கை.
யதார்த்தம் புரிந்தும் போராட்டம் ஓயாமல்
பரிதவிக்கும் மனதுக்கு
பதில் ஏதும் இல்லாததால்
என்னை நானே அழிக்கிறேன் நிரந்தரமாய்
வாழ்ந்த தடம் ஏதும் இன்றி.

மேலும்

Abimanyu - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Nov-2017 3:45 pm

காதலோடு
காலையில் கண் விழிக்கிறேன் .
நீ கண்ணீரை
எனக்கு உணவாகத் தருகிறாய் .
காதலோடு
இரவில் உறங்கச் செல்கிறேன் .
நீயோ அழுகைகளாலேயே
எனக்கு ஆராரோ பாடுகிறாய் .

மேலும்

அருமை நட்பே.... 17-Nov-2017 2:32 pm
Abimanyu - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Nov-2017 3:42 pm

சகியே
என்னைப் பிரிதல்
உனக்குச் சம்மதமெனில்
சத்தமில்லாமல் செல் .
யுத்தம் வேண்டாம் .
யாருடன் உன் யுத்தம் ?
உனக்குப் பிரியமான என்னுடனா ?
வேண்டாம் !
ஆயுதம் எல்லாம் துறந்து
நிராயுதபாணியாய் நான் .
போர் செய்ய நீ
என் எதிரி இல்லை .
என் உயிர் .
சத்தமில்லாமல்
பிரிந்து போ
பிரிதல் உனக்குச் சம்மதமெனில் .

மேலும்

அருமை நட்பே...... 17-Nov-2017 2:32 pm
மேலும்...
கருத்துகள்

மேலே