மரமும் மனிதனும்
மனிதா! என்னைப்பார் !
மண்ணில் ஒரு விதையாய் விழுந்தேன்.
சில காலம் உள்ளே தனித்து புழுங்கி இருந்தேன்.
ஆனாலும் நான் விழித்திருந்தேன்.
தாகமும் வெப்பமும் இருட்டும் அழுத்தமும்
என்னை சூழ்ந்திருக்க என்னுள் நானே
ஒரு முடிவெடுத்தேன்- ஒரு விருட்சமாய்
வளர முடிவெடுத்தேன்.
நீர் தேடி அலைந்தன என் வேர்கள்.
மூச்சுக்காக தவித்திருந்து
முட்டி மோதி தடைகளைத் தகர்த்தேன்.
இன்று காலத்தை வென்று
கவிதையாய் நிற்கிறேன்.
கர்வத்தில் இதை நான் சொல்லவில்லை.
அவமானமும் துக்கமும் தோல்விகளும்
உன்னைத் துரத்தும் போது
சற்றே நின்று என்னை உற்றுப்பார்.
என்னுள் உன்னைக் காண்பாய்!