அவன் அறியாததா
கிராமத்து பள்ளியில்
கல்வி கற்கும்
ஒரு பள்ளி மாணவி
ஏழை உழவனின் புதல்வி
அவள் படிப்பு பாதிக்காமல்
அவள் ஒருத்தியின் பயணத்துக்கு
இலாப நட்டம் பாராமல்—ஒரு
இரயில் வண்டியை
ஒரு அரசாங்கம்
மூன்றாண்டு காலம்
இயக்குகிறதென்றால்
அந்த நாட்டை
தெய்வம் வீற்றிருக்கும்
திருக்கோயிலாய் எண்ணி
நெடுஞ்சாணாய் விழுந்து
நெஞ்சம் துதிக்க நினைக்குது
ஜப்பான் நாட்டை—இறைவனும்
சரியாத்தான் படைத்துள்ளான்
கிழக்கு திசையில்
கையெடுத்து கும்பிட
பாரத தேசத்திலும்
படிக்கும் பிள்ளைகளுக்கு
பேருந்து உண்டு—சரியான
நேரமும், வசதியும் தான் இல்லை
பகவானேயானாலும்—அதில்
பயணிக்க மாட்டான்
அனைத்தும் அவன் செயல்
அவன் அறியாததா!