Adalarasan - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Adalarasan |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 08-Jul-2019 |
பார்த்தவர்கள் | : 97 |
புள்ளி | : 4 |
உற்றுப்பாருங்கள்
ஓவியம் இது...
காலங்கள் ஓவியமாய்...
நிஜத்தின் பிரதிபலிப்பாய்...
பாதம்பட்ட தண்ணீhpன்
கோரத் தாண்டவம்
கழுத்தை வளைக்கும் கரங்கள்
காதோரம் ஒட்டிய கண்கள்
கவலையறியா முகத்தில்
திவலைகளாய் நீா்த்துளிகள்
தாய் விடமாட்டாள்
தளிரின் நம்பிக்கை
தாயை விடமாட்டேன்
சேயின் செய்கை
ஓவியம் சொல்லும்
ஒற்றை மொழிதான்
"தாய்மை"
சுழற்றியடித்த காற்றில்
சுருங்கிவிட்ட உலகம்
சுற்று நோக்கிலும் தண்ணீா்...
உற்று நோக்கினால் கண்ணீா்...
மனிதா்களை காணோம்
மறுகணம் சாவோ...
தாயின்...
முகத்திலே கலவர விழிகள்
இடுப்பிலோ நம்பிக்கையின் ஒளிகள்
எவரையும் சோகமாக்கும் ஓவியம்
எமனையும் கலங்கவைக்கும் அதிசயம்
நெகிழ்ந்
தாய்மை
பெண்
ஆயிரம் வர்ணனைகள் ...
அது தவறு
அதற்கும் மேலாக
உலகின் உயர்ந்தவைகளுக்கு
உவமையாக சொல்லப்படுபவள்
இனம்
அது உன் வரம்...
இளமை
அது உன் தேர்ச்சி...
பெண்மை
அது உன் பெருமை...
அழகு
அது உன் உடைமை....
நாணம்
அது உன் சொத்து...
நளினம்
அது உன் அணி...
அச்சம்
அது உன் அடையாளம்...
அன்பு
அது உன் ஆயுதம்...
இனிமை
அது உன் இயற்கை...
மங்கலம்
அது உன் மணவாளன்...
கற்பு
அது உன் உயிர்...
அனால்
உன்னிடம் இல்லாதவை
உனக்கே உரித்தானவை
உலகோர் மதிப்பவை
உயர்வாய் நினைப்பவை
கருவாய் உன்னில்
உருவாய் இருப்பவை
அதுவே உனது
அற்புத தாய்மை
பார்க்க வில்லை... பழகவில்லை...
பேசவில்லை... ஸ்பரிசமில்லை...
கேட்டதில்லை... சொன்னதில்லை....
இங்குமில்லை... எங்கோதெரியவில்லை...
சிறுநீள கயிற்றில்
துளிமஞ்சள் சாயமிட்டு
உன்கழுத்தில் தொங்கவிட்டதால்
நீ எனக்கு சொந்தம்
பட்டவோ பெறவில்லை ...
பதிவேதும் செய்யவில்லை ...
பணமாறுதல் நடக்கவில்லை...
பாத்திரமோ எழுதவில்லை ...
ஆனாலும்
நீ எனக்கு சொந்தம்
மஞ்சளும் கயிறும்
செய்யும் வேலை
மிஞ்ச இங்கு
ஒன்றும் இல்லை
தொட்டு வைத்தஉறவுகள்
தொலைவினிலே இருக்க
கட்டிவைத்த உறவு மட்டும்
கடைசிவரை வருவதென்ன
சொந்தமெனும் சொல்லுக்கு
சொல்லிவைத்த பொருள்
இதுதானோ
இல்லை நீதானோ