சொந்தம்

பார்க்க வில்லை... பழகவில்லை...
பேசவில்லை... ஸ்பரிசமில்லை...
கேட்டதில்லை... சொன்னதில்லை....
இங்குமில்லை... எங்கோதெரியவில்லை...

சிறுநீள கயிற்றில்
துளிமஞ்சள் சாயமிட்டு
உன்கழுத்தில் தொங்கவிட்டதால்
நீ எனக்கு சொந்தம்

பட்டவோ பெறவில்லை ...
பதிவேதும் செய்யவில்லை ...
பணமாறுதல் நடக்கவில்லை...
பாத்திரமோ எழுதவில்லை ...

ஆனாலும்
நீ எனக்கு சொந்தம்

மஞ்சளும் கயிறும்
செய்யும் வேலை
மிஞ்ச இங்கு
ஒன்றும் இல்லை

தொட்டு வைத்தஉறவுகள்
தொலைவினிலே இருக்க
கட்டிவைத்த உறவு மட்டும்
கடைசிவரை வருவதென்ன

சொந்தமெனும் சொல்லுக்கு
சொல்லிவைத்த பொருள்
இதுதானோ
இல்லை நீதானோ

எழுதியவர் : ஆடலரசன் (8-Jul-19, 8:06 am)
சேர்த்தது : Adalarasan
Tanglish : sontham
பார்வை : 234

மேலே