தாய்மை

தாய்மை

பெண்
ஆயிரம் வர்ணனைகள் ...
அது தவறு
அதற்கும் மேலாக

உலகின் உயர்ந்தவைகளுக்கு
உவமையாக சொல்லப்படுபவள்

இனம்
அது உன் வரம்...

இளமை
அது உன் தேர்ச்சி...

பெண்மை
அது உன் பெருமை...

அழகு
அது உன் உடைமை....

நாணம்
அது உன் சொத்து...

நளினம்
அது உன் அணி...

அச்சம்
அது உன் அடையாளம்...

அன்பு
அது உன் ஆயுதம்...

இனிமை
அது உன் இயற்கை...


மங்கலம்
அது உன் மணவாளன்...

கற்பு
அது உன் உயிர்...

அனால்

உன்னிடம் இல்லாதவை
உனக்கே உரித்தானவை
உலகோர் மதிப்பவை
உயர்வாய் நினைப்பவை

கருவாய் உன்னில்
உருவாய் இருப்பவை
அதுவே உனது
அற்புத தாய்மை

எழுதியவர் : Adalarasan (20-Jul-19, 10:07 pm)
சேர்த்தது : Adalarasan
Tanglish : thaimai
பார்வை : 63

மேலே