அம்மா
அம்மா என்றாலே பாசம் அல்லவா!
அம்மா இல்லாமலோ ஏதும் இல்லை!
எனக்கொரு துன்பம் என்றால் துடிப்பாள்!
தனக்காக ஏதும் நினைக்க மாட்டாள்!
எத்தனை பிறவிகள் இருந்தாலும் உன் மடி மேல் தவழ ஆசை!!
மீண்டும் உன் கருவறையில் வசிக்க ஆசை!
என்னை இவ்வுலகில் அறிமுகம் செய்தாய்!
எல்லாம் அறிந்தவனாய் வளர்த்தாய்!
எனக்காக பல துன்பங்கள் தாங்கினாய்!
என்றும் இருப்பேன் உன் துணையாய்!!