தாய்
ஒரு தாய்
தன் வயிற்றில் கருவை சுமந்து
கற்பினியாய் வலம் வந்து
கருவின் அசைவுகளை ரசித்து
அதை கணவரிடம் பகிர்ந்து
கைகளில் வளையல்களை புடைந்து
ஒன்பது மாதம் கடந்து
வலியால் துடித்து
எலும்புகளை உடைத்து
குழந்தையை ஈன்று எடுத்து
இந்த மண்ணில் விதைத்து
மறுபிறவி எடுத்து
தாய்மையை முடித்து
தெய்வமாக மாறுகிறார்