கைக்குழந்தை

மூடிக்கொள்ளும் கையில்
ரேகையாக மாறுவேன்

கூசிப்போகும் கண்ணில்
கண்ணீராகத்தேங்குவேன்

குரல் கேட்டுச் சிணுங்கும்
செவியில் ஒலியாகுவேன்

நாசிவழி வாசமாகி
உயிர் சேருவேன்

சுருக்கம் கொண்ட
பாதம் தாங்க
நிலமாகுவேன்!

எழுதியவர் : Ramkumar (23-Jul-19, 11:23 am)
சேர்த்தது : kavidhai yasagan
பார்வை : 5031

மேலே