என் நம்பிக்கை

என் வயிற்றில்
வளர்பிறையாய் வளர்ந்த
குட்டி நிலவே

உன் கதகதக்கும் அணைப்பிலே
புலர்ந்திடும் என் பொழுதுகள்

உன் சிங்கார சேட்டைகளால்
உஞ்சலாடும் என் மனம்

உன் சரமாரி முத்தங்களால்
சரிந்து விழும் என் கவலைகள்

என்னை குழந்தையாக்கும்
உன் அதிகார மிரட்டல்கள்

பறவைகளின் கீதம் மிஞ்சும்
உன் கொஞ்சல் வார்த்தைகள்

கல்கிக்கே கதை சொல்லும்
உன் கற்பனை கதைகள்

என்னை பதைபதைக்க வைக்கும்
உன் கள்ள விளையாட்டுக்கள்

என் கரம் பிடித்து நடக்கும்
குட்டி நிலவே !!!!
உன் பிஞ்சு விரல்களில்
என் வாழ்வின் நம்பிக்கைகள்

எழுதியவர் : அ. பிரியா (24-Jul-19, 12:47 pm)
சேர்த்தது : பிரியாஅ
Tanglish : en nambikkai
பார்வை : 1061

மேலே