Anita Rajesh - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Anita Rajesh |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 10-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 18 |
புள்ளி | : 0 |
காற்றே...
உன் வருகைக் கண்டு
மரக்கிளைகள் நடனமாடும்...!
தனை மறந்து
செடிக்கொடிகளெல்லாம்
நயமாய் தலையாட்டும்...!
புல்லாங்குழலுக்கு
நீதானே
புதுக்கவிதை...!
குழந்தைகள் கையில்
கொஞ்சி விளையாடும்
பலூனும் நீதான்...!
வெற்றுத்தாளையும்
வானுயரப் பறக்கும் பட்டமாய்
மாற்றுவதும் நீதான்..!
சிமிலிக்குள்ளே
ஒளிந்திருக்கும்
முரட்டுக்கார நெருப்புக்கூட
உன்னைக் கண்டு நடுநடுங்கும்...!
நீயின்றி ஏது
மின்சாரம்...?
நீதானே அதற்கு
சம்சாரம்...!
காதலர்கள் மயக்கம்கொள்ள
அழகிய தென்றலாய் வருவாய்...
கட்டுக்கடங்கா வீரன் நீயென்று
உலகெல்லாம் பறைசாற்றிட
புயலாக நீ அவதரிப்பாய்...!
உன் மார்பில் மு
மண்ணை நாம் மதிக்கவில்லை..
=== செயற்கை உரத்தால் தொலைத்தோம்..!
மலைகளை நாம் விடவில்லை....
=== வெடிகள் வைத்து பொடித்தோம்..!
மரங்களை நாம் பார்க்கவில்லை...
=== மதி தொலைத்து முறித்தோம்..!
கடலை நாம் காணவில்லை...
=== விஷ கழிவை கலந்தோம்..!
சுவாசிக்கும் காற்றை நாம்..
=== சுற்றி சுற்றி புகைத்தோம்..!
வானத்தை நாம் ரசிக்கவில்லை...
=== பெரும் ஓட்டை போட்டோம்..!
பூமியின் கோபம் பூகம்பமாய்...
மலையின் கோபம் மண்சரிவாய்..
மரத்தின் கோபம் மழையின்மையாய்
கடலின் கோபம் சுனாமியாய்..
காற்றின் கோபம் கடும் புயலாய்..
வானத்தின் கோபம் வெப்பமாய்..
மனிதா மனதில் குறித்துக்கொள்....
சுற்றும் சூரியன் நடுப்பகல் ந
அல்லி இதழ் விரித்து
அன்பு தங்கை சிரித்திடுவாள்
அண்ணன் என்வருகை கண்டு
அவள் உள்ளமெல்லாம் பூரித்திடுவாள்... !
பஞ்சு விரலாலே பிஞ்சவள்
என்தலையில் செல்லமாய் குட்டிடுவாள்
கொஞ்சி விளையாடிட குழந்தையவள்
பூங்காவுக்கு கூட்டிச்செல்ல அழைத்திடுவாள்... !
கடைக்குச்சென்று மிட்டாய் வாங்க
சில்லறை காசும் கேட்டிடுவாள்
அதைவாங்கி தின்ற மறுகணமே
மீண்டும் வேண்டுமென்று அடம்பிடிப்பாள்... !
மழலையவள் கையில் பொம்மையோடு
அன்பாக எப்பொழுதும் விளையாடிடுவாள்
அவளே குழந்தை அவள்பொம்மைக்கு
தாலாட்டு ஒன்றைப் பாடிடுவாள்... !
என் கையைப் பிடித்து
ஊரு சுற்றி மகிழ்ந்திடுவாள்
செல்லமாய் கன்னத்தில் முத்தங்களி