Keerthy - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  Keerthy
இடம்:  Salem
பிறந்த தேதி :  03-Dec-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  03-Nov-2017
பார்த்தவர்கள்:  35
புள்ளி:  4

என்னைப் பற்றி...

ஆர்வத்தினால் மட்டுமல்லாமல்,ஆறுதலுக்காகவும் எழுத்தை நேசிப்பவள் நான்☺

என் படைப்புகள்
Keerthy செய்திகள்
Keerthy - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Nov-2017 7:59 pm

மூன்று வயதில் நடந்தது
இன்றும் மூளையை தட்டுகிறது..!!
அப்பாவின் காலணியை
ஒற்றைக்காலில் இழுத்துவந்தது..!!
பணிமுடிந்து இரவில் வரும்
அப்பாவின் மார்பையே
பஞ்சுமெத்தையாக்கிக் கொண்டது..!!
அப்பாவின் தலைபாகையில்
என் முகத்தை மறைத்துக்கொண்டது..!!
அம்மா நிறைத்துவிட்ட வயிறு
அப்பா வந்தவுடன் மீண்டும்
பசியை அழைத்துக்கொள்ளும்..!!
சைக்கிளின் முன் இருக்கும் கூடை
அதுவே என் சிம்மாசனம்..
அறனாக அப்பாவின் கைகள்
அணைத்துக்கொண்டபடி நீண்டதூரம்
தொடரும் பயணம்..!!
பூங்காவில் இருக்கும் பூக்களில்
என் மகளே அழகானவள் என
அப்பா சொன்னது..!!
தாத்தா வந்து தூக்கிச்செல்ல
விடைகொடுக்க முடியாமல்
இரவெல்லாம் அப்பா அழுதது

மேலும்

Keerthy - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Nov-2017 5:58 pm

மங்களமாய் பட்டு உடுத்தி
பவளக்கல் பதக்கமிட்டு..!!
வெட்கத்தை குலைத்தெடுத்து
அரிதாரமாய் பூசிக்கொண்டு..!!
செவ்வாய் மலர
சிரிப்பை உதிர்த்து..!!
காதலை கண்களில்
கசிய விட்டு..!!
கணவணை அணைத்துக்கொள்வதும்
குழந்தைகளை அள்ளிக்கொள்வதுமா...
பெண்மை..??
அது அல்வவே பெண்மை..!!
கலைந்து கிடக்கும்
பலகோடி கற்பனைகளில் தன்கனவை தேடிப்பிடித்து..!!
முயற்சியால் மெருகேற்றி..
எதிர்வரும் தடைகளையெல்லாம்
ஏறிமிதித்து..!!
பெண் என்ற மாயையை
உடைத்தெறிந்து..!!
சில ஆணாதிக்க
அறியாமையை பகுத்தறிந்து..!!
மக்கிவிடும் தேகத்தின் மேல்விழும்
பாலியல்கொடுமைகளால்-தன்னை
தளர்த்தாமல் துணிந்தெழுந்து..!!
தோல்வியுற்ற முயற்சியால்

மேலும்

Keerthy - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Nov-2017 12:17 pm

காலம் என்ற கணக்கீடு
மட்டும் இல்லையெனில்
மனிதனும் ஒரு
சுதந்திர பறவை தான்..!
பிறக்கும் நேரத்தைக் கொண்டு
வயது என்ற கணக்கும்..
இறப்பின் வேகத்தை கொண்டு
ஆயுள் என்ற கணக்கும்
வாழ்வை நகர்த்துகிறது..
ஓடிவிடும் நாட்கள் ஒருவித
பயத்தை மட்டும் விட்டுச்செல்லும்..!
எவ்வளவு தூரம் சென்றாலும்
துரத்தி வரும் வயது..!
மழலைப்பருவத்தை திரும்பிப்பார்க்கும்
இளமைகாலத்தின்
முன் வந்து நிற்கும்
முதுமையின் வரவேற்பு.!
இவ்வளவு தான் வாழ்க்கையா..??
என்ற கேள்வியும்..
இவ்வளவு உண்டா வாழ்வதற்கு
என்ற ஆச்சரியமும்..!
நாட்களை கடத்திச்செல்லும்..
நகரும் வாழ்க்கையே
அர்த்தமானது😊😊

-🖋கீர்த்தி🖌

மேலும்

Keerthy - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Nov-2017 9:52 pm

துயில்கூட தீண்டாத
தனித்தீவாய் நானாகினேன்..!!
உன் பிம்பம் நிழலாட
இமைக்காமல் விழிக்காய்கிறேன்..!!
மனமெல்லாம் உன்வார்த்தை
நிற்காமல் மிதந்தோடவே..
பதைபதைக்கும் என்நெஞ்சம்
தொட்டுவிட பின்செல்லுதே..!!
புயல்காற்று தொட்டாலும்
புவிகூட நின்றாலுமே..
உன் நிழலாகி தொடுவேனே
நான்..!!
என்றேனும் அறிவாயா
என்னை..!!
உறைபனியாய் கரையும்
என் கண்ணை..!!
வாஞ்சையோடு விரல்கொண்டு
வருடத்தான் செய்வாயோ..
மறைந்துவிட்ட உறக்கத்திற்கு
மறுபிறப்பு கொடுப்பாயோ..!!!

👆👉கீர்த்தி✍🖋

மேலும்

Keerthy - அப்துல் சிவப்பு ரோஜா இரசிகன் அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
03-Nov-2017 11:12 am

நாத்திகர்கள் எப்படி உருவாகிறார்கள் ? எதனால் ?

மேலும்

அற்புதமான பதில் நண்பரே .... 10-Nov-2017 1:04 pm
நாத்திகர்களுக்குப்.பிறப்பவர்கள்.நாத்திகர்களாக.ஆக்கப்.படுகிறார்கள்! பக்தி சிரத்தையில்லாத குடும்பத்தில்பிறப்பவர்கள், கர்மவினை,தன்வினை பற்றித் தெளிவில்லாதவர்கள்,கஷ்டம்.வந்தால் மட்டும்.கடவுளிடம்.ஓடுபவர்கள்,நூற்றியெட்டுத் தேங்காய்.உடைத்தாலோ,ஒரு.லட்சம்.ராமஜெயம்.எழுதினாலோ.எல்லாம்.நடந்துவிடும்.என்று.நம்பி.ஏமாறுபவர்கள்.நாத்திகர்களாக.மாறுகிறார்கள்! 09-Nov-2017 5:28 am
கடவுளை வரம் கொடுக்கும் ATM எந்திரனாக நினைக்கும் மனிதன் வணங்கியும் வேண்டியும் இல்லை என்று ஆகும் போது ஏமாற்றம் அடையும் போது இறைவன் இருக்கிறானா என்று ஐயம் கொள்கிறான் அல்லது இல்லை என்ற நம்பிக்கை இன்மையை இல்லை என்ற இறை மறுப்பை ஏற்கிறான். இது புத்தி பூர்வமானதா ? சிந்திக்க ! 06-Nov-2017 8:17 am
Keerthy - அப்துல் சிவப்பு ரோஜா இரசிகன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Nov-2017 11:12 am

நாத்திகர்கள் எப்படி உருவாகிறார்கள் ? எதனால் ?

மேலும்

அற்புதமான பதில் நண்பரே .... 10-Nov-2017 1:04 pm
நாத்திகர்களுக்குப்.பிறப்பவர்கள்.நாத்திகர்களாக.ஆக்கப்.படுகிறார்கள்! பக்தி சிரத்தையில்லாத குடும்பத்தில்பிறப்பவர்கள், கர்மவினை,தன்வினை பற்றித் தெளிவில்லாதவர்கள்,கஷ்டம்.வந்தால் மட்டும்.கடவுளிடம்.ஓடுபவர்கள்,நூற்றியெட்டுத் தேங்காய்.உடைத்தாலோ,ஒரு.லட்சம்.ராமஜெயம்.எழுதினாலோ.எல்லாம்.நடந்துவிடும்.என்று.நம்பி.ஏமாறுபவர்கள்.நாத்திகர்களாக.மாறுகிறார்கள்! 09-Nov-2017 5:28 am
கடவுளை வரம் கொடுக்கும் ATM எந்திரனாக நினைக்கும் மனிதன் வணங்கியும் வேண்டியும் இல்லை என்று ஆகும் போது ஏமாற்றம் அடையும் போது இறைவன் இருக்கிறானா என்று ஐயம் கொள்கிறான் அல்லது இல்லை என்ற நம்பிக்கை இன்மையை இல்லை என்ற இறை மறுப்பை ஏற்கிறான். இது புத்தி பூர்வமானதா ? சிந்திக்க ! 06-Nov-2017 8:17 am
மேலும்...
கருத்துகள்

மேலே