அப்பா

மூன்று வயதில் நடந்தது
இன்றும் மூளையை தட்டுகிறது..!!
அப்பாவின் காலணியை
ஒற்றைக்காலில் இழுத்துவந்தது..!!
பணிமுடிந்து இரவில் வரும்
அப்பாவின் மார்பையே
பஞ்சுமெத்தையாக்கிக் கொண்டது..!!
அப்பாவின் தலைபாகையில்
என் முகத்தை மறைத்துக்கொண்டது..!!
அம்மா நிறைத்துவிட்ட வயிறு
அப்பா வந்தவுடன் மீண்டும்
பசியை அழைத்துக்கொள்ளும்..!!
சைக்கிளின் முன் இருக்கும் கூடை
அதுவே என் சிம்மாசனம்..
அறனாக அப்பாவின் கைகள்
அணைத்துக்கொண்டபடி நீண்டதூரம்
தொடரும் பயணம்..!!
பூங்காவில் இருக்கும் பூக்களில்
என் மகளே அழகானவள் என
அப்பா சொன்னது..!!
தாத்தா வந்து தூக்கிச்செல்ல
விடைகொடுக்க முடியாமல்
இரவெல்லாம் அப்பா அழுதது..!!
இரயில்பயணம் ரத்தாகவே
நான் மீண்டும் வந்து
அப்பாவை சேர்ந்தது..
சிவந்து கிடந்ந முகம்
புன்னகையால் மலர்ந்தது..!!
என் பிடிவாதங்களையெல்லாம்
பேரழகாய் பார்த்தது..!!
தூங்கும் என்னை
ஓயாமல் ரசித்தது..!!
அழகான என் பிஞ்சுக்கைகளில்
அதிகாரமாய் பேனாவை கொடுத்தது..!!
இவையெல்லாம் ஒரே ஒரு
வார்த்தைக்காக..
நான் சொல்லும் ஒரு
வார்த்தைக்காக..
"அப்பா"..........