பெண்மை

மங்களமாய் பட்டு உடுத்தி
பவளக்கல் பதக்கமிட்டு..!!
வெட்கத்தை குலைத்தெடுத்து
அரிதாரமாய் பூசிக்கொண்டு..!!
செவ்வாய் மலர
சிரிப்பை உதிர்த்து..!!
காதலை கண்களில்
கசிய விட்டு..!!
கணவணை அணைத்துக்கொள்வதும்
குழந்தைகளை அள்ளிக்கொள்வதுமா...
பெண்மை..??
அது அல்வவே பெண்மை..!!
கலைந்து கிடக்கும்
பலகோடி கற்பனைகளில் தன்கனவை தேடிப்பிடித்து..!!
முயற்சியால் மெருகேற்றி..
எதிர்வரும் தடைகளையெல்லாம்
ஏறிமிதித்து..!!
பெண் என்ற மாயையை
உடைத்தெறிந்து..!!
சில ஆணாதிக்க
அறியாமையை பகுத்தறிந்து..!!
மக்கிவிடும் தேகத்தின் மேல்விழும்
பாலியல்கொடுமைகளால்-தன்னை
தளர்த்தாமல் துணிந்தெழுந்து..!!
தோல்வியுற்ற முயற்சியால்
மனம் தளராமலும்..!!
தொட்டுவிட்ட இலட்சியத்தால்
தடம் பிரலாமலும்..!!
தலை நிமிர்ந்து
தன்னைத் தானாக
நிலைக்கவைப்பதே..!!
பெண்மை..!!!!!
✒கீர்த்தி🖋