நீயின்றி அமையாது உலகு

நீர் இன்றி வேர் இல்லை
நீ இன்றி நான் இல்லை
அன்பில் நீ உயர்நிலை
நீ போதும் வாழ்வில்
குறையில்லை
நீ இல்லா என்நிலை
நீர் இல்லா நீர்நிலை
உன் பாசத்திற்கும் நேசத்திற்கும்
விலை இல்லை ..
உன் நேர்மைக்கு நிகரில்லை ...
உன்னை போல் வரம் வேறில்லை..
உன் போல் அழகு யார்க்கும் இல்லை
இயற்க்கை அதை யார்க்கும் வாய்க்கவில்லை
உன்னோடு வாழ்வது ஆனந்தத்தின் எல்லை
உன்னிடத்து யாரையும் நினைக்க மனமில்லை..
என்னுடன் என்றும் இரு போதும்
எனக்கு மரணம்கூட இல்லை ....
வாழ்க்கை பயனை கட்டிய உனக்கு
நன்றியை விட சொல் வேறொன்றும் இல்லை..
என்றும் அன்போடு வாழ்வேன்
உன்னிடத்து வண்ண மயிலே ...

எழுதியவர் : (6-Nov-17, 6:47 pm)
பார்வை : 96

மேலே