பார்க்க ஏங்கும் காதல்

துயில்கூட தீண்டாத
தனித்தீவாய் நானாகினேன்..!!
உன் பிம்பம் நிழலாட
இமைக்காமல் விழிக்காய்கிறேன்..!!
மனமெல்லாம் உன்வார்த்தை
நிற்காமல் மிதந்தோடவே..
பதைபதைக்கும் என்நெஞ்சம்
தொட்டுவிட பின்செல்லுதே..!!
புயல்காற்று தொட்டாலும்
புவிகூட நின்றாலுமே..
உன் நிழலாகி தொடுவேனே
நான்..!!
என்றேனும் அறிவாயா
என்னை..!!
உறைபனியாய் கரையும்
என் கண்ணை..!!
வாஞ்சையோடு விரல்கொண்டு
வருடத்தான் செய்வாயோ..
மறைந்துவிட்ட உறக்கத்திற்கு
மறுபிறப்பு கொடுப்பாயோ..!!!

👆👉கீர்த்தி✍🖋

எழுதியவர் : கீர்த்தி (4-Nov-17, 9:52 pm)
பார்வை : 610

மேலே