Ramamoorthy Subbhaiah - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Ramamoorthy Subbhaiah |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 13-Sep-2015 |
பார்த்தவர்கள் | : 24 |
புள்ளி | : 2 |
இன்றைய சூழலில் நடக்கும் கொலை, கொள்ளை போன்ற குற்றங்களுக்கு முக்கிய காரணம் எது என்று நீங்கள் நினைக்குறீர்கள்?
நட்பிற்கு ஏது பாலினம்?
அவள் என்றும் என் நட்பினம்.
காமம் தவிர்த்து
காதல் கொண்டால்....
கற்பு என்பது
பொதுவென்றறிந்தால்....
நேசம் மட்டுமே
நிஜமென்றிருந்தால்....
பாசம் ஒன்றே
பகிர்தல் என்றால்.....
தோழியின் நட்பு
தொடர்வதில் துன்பமில்லை
மனைவிக்கு மட்டும்
மஞ்சத்தில் இடம்....
தோழிக்கு என்றும்
தோளில் இடம் ....
இருவருக்கும் என்றும்
இதயத்தில் இடம்....
என்றென்றும் இன்னல் இல்லாதவை
அன்பின் பகிர்தல்
ஆணென்றும் பெண்னென்றும்
ஆராய்ந்து வருவதில்லை
என்னுயிர் தோழியே!
என் உறவில்
என்றென்றும்
மாற்றமிருக்கும்
மகனாய் பிறந்தேன்
சகோதரனாய் வளர்ந்தேன்
கணவனாய் மாறினேன்
முகிலினங்கள் முத்தமிட்டபோது
முத்துமுத்தாய் வியர்த்து
மழையெனத் திரிந்து
மண்ணிற்கு வந்து சேர்ந்தேன்
- நான் வானுக்கும் சொந்தமில்லை
-
மண்ணோடு மணம்புரிந்து
என்னோட நிறம் மாறி
எட்டியிருந்த குட்டையிலே
எப்படியோ போய்ச் சேர்ந்தேன்
- நான் மண்ணுக்கும் சொந்தமில்லை
-
குட்டையிலே கொஞ்சநேரம்
குழம்பியபடி கூடியிருந்தேன்
குட்டையும் நிரம்பிவிட
ஓடையிலே வழிந்துவிட்டேன்
- நான் குட்டைக்கும் சொந்தமில்லை
-
ஓடையிலே ஓடிச்சென்று
ஓடிக்கொண்டிருந்த
ஆற்றினிலே அமிழ்ந்துவிட்டேன்
- நான் ஓடைக்கும் சொந்தமில்லை
-
ஆற்றினிலே அலைந்து சென்று
ஆதரவாய் கிடைத்த
அணைக்கட்டை
அடைந்துவிட்டேன்
- நான் ஆற்ற