திருமணமாண ஆணும் பெண் தோழியின் நட்பும்
நட்பிற்கு ஏது பாலினம்?
அவள் என்றும் என் நட்பினம்.
காமம் தவிர்த்து
காதல் கொண்டால்....
கற்பு என்பது
பொதுவென்றறிந்தால்....
நேசம் மட்டுமே
நிஜமென்றிருந்தால்....
பாசம் ஒன்றே
பகிர்தல் என்றால்.....
தோழியின் நட்பு
தொடர்வதில் துன்பமில்லை
மனைவிக்கு மட்டும்
மஞ்சத்தில் இடம்....
தோழிக்கு என்றும்
தோளில் இடம் ....
இருவருக்கும் என்றும்
இதயத்தில் இடம்....
என்றென்றும் இன்னல் இல்லாதவை
அன்பின் பகிர்தல்
ஆணென்றும் பெண்னென்றும்
ஆராய்ந்து வருவதில்லை
என்னுயிர் தோழியே!
என் உறவில்
என்றென்றும்
மாற்றமிருக்கும்
மகனாய் பிறந்தேன்
சகோதரனாய் வளர்ந்தேன்
கணவனாய் மாறினேன்
தந்தையாய் தவமடைந்தேன்
தாத்தாவாய் தவழ்ந்திருவேன்
நீயும் நானும் என்றும் மாறவில்லை
தோழன் தோழியாய்
தொடர்கிறது நம் பந்தம்.
கரம்பற்றி நடந்த போது
காமம் கண்டதில்லை
உச்சி முகர்ந்த்தபோது
உணர்ச்சிகள் உழன்றதில்லை
தோள் மீது சாய்ந்த போது
தோன்றவில்லை பாலுணர்வு
மடிமீது தலை சாய்த்து
மங்கை நீ உறங்கையிலே
மகளென்றே உன்னை
மனம் எண்ணும்.
என்னோடு நீ இருந்தால்
துன்பம் உன்னால்
தொலைந்து போகும்
இன்பம் என்றும்
இரட்டிப்பாகும்
சொந்தமும் பந்தமும்
சூழ்ந்திருந்தாலும்
சுகமான சிந்தனைகள்
சுடர்க்கொடியே நீ தானே
ஒளவை – அதியமானுக்கு
அடுத்தபடியாய் அதிகமாய்
அக்கறை கொண்டவர்
நாம் தானே