சாய் அகல்யா - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : சாய் அகல்யா |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 06-Jan-2019 |
பார்த்தவர்கள் | : 14 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
சாய் அகல்யா செய்திகள்
உணர்வுகளைக் கொன்று உறவுகளைக் காப்போம்...
உள்ளத்தைக் கல்லாக்கி அவர் மொழியும் பொய்களைக் கூட உண்மை என ஏற்றால் மட்டுமே இங்கு பல உறவுகள் நிலைக்கின்றன...
உணர்வுகளைக் கொன்று உறவுகளைக் காப்போம்...
⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️
*அம்மா கவிதை*
படைப்பு *கவிதை ரசிகன்*
⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️
நான்
பெண் குழந்தை என்பதால்
எப்படியும்
கள்ளிப்பால் தான் கொடுப்பீர்கள்...
அதை
ஒரூநாள் கழித்து கொடுங்கள்...
அந்த ஒரு நாளாலாவது
உயிர் வாழலாம் என்றல்ல...
அம்மா!
உன் மடியில்
உறங்கலாம் என்றுதான்...!!!
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
குழந்தை பிறந்தவுடன்
எல்லா அம்மாக்களும்
குழந்தைக்கு
பால் கொடுப்பார்கள்
முத்தம் கொடுப்பார்கள்
அரவணைப்பு கொடுப்பார்கள்
ஆனால்
நீதானம்மா
நான் பிறந்தவுடன்
எனக்காக கொடுத்தாய்
"உயிரையே...!"
🔱 (...)
அண்ணனோ_அக்காவோ
"""""""""""""""""""""""""""""""""""""""""""""
விடியற்காலை
2.30 அல்லது 3 மணி இருக்கும்
அலறல் சத்தம்
வலியோடு
வீட்டின் எங்கும் ஒலித்தது
எதிர்பார்த்து - தினம்
காத்திருந்து
நாளுக்கு நாள் வயிறுப் பெருத்து
அம்மாவாகும்
அந்த இனிய பொழுதுக்கான
வலியும் மகிழ்வும்
ஒன்றென சேர்ந்த
அலறல் தான் இது
அரசின் இலவச
அவசர ஊர்த்திக்கு அழைத்து
விரைவில் வந்தடைந்த
ஊர்த்தியில் என்னை கிடத்தினார்கள்
நூறிலும் நூறை கடந்தும்
விரைந்த ஊர்த்தி
சில மணி தியாளங்களைக் கடந்து
என்னை
அரசு மருத்துவமனையில் விட்டது
ஸ்டெச்சரில் படுக்க வைத்து
பிரசவ வார்டை நோக்கி
செவிலியரோடு ஊழியர்கள்
ஸ்டெச்சரோடு சேர்த்து என்னையும்
என் மகவுவையும் தள்ளிச்சென்றார்கள்
நுழைவை அடைந்ததும்
என்னையும் என் வலிகளையும் கடந்து
மல்லாக்க படுத்திருந்த என்னுள்
அங்கு ஒட்டப்பட்டிருந்த வாசகம்
உமிழ்ந்தவாறே
மெல்ல தின்ங்க ஆரம்பித்தது
பிரசவ அறைக்குள்
கொண்டு செல்லப்பட்ட நான்
வலிகளில் அலறுவதாக எதையும்
உணரவில்லை
கருக்கலைப்பு
அதுனுடன் சேர்த்து ஏதோ எழுதப்பட்ட
அந்த வாசகம் மட்டுமே மெல்ல மெல்ல
என்னை
விழுங்கிக் கொண்டிருந்தது
ஆம்
பிரசவத்திற்காக படுக்க
வைக்கப்பட்டிருக்கும் நான்
கருக்கலைப்பு என்னும் ஒற்றை சொல்லை
விட்டு வெளிவராமல்
வரஇயலாமல் வலிகளைக் கடந்து
வேதனைகளுக்குள் மூழ்கடிக்கப்பட்டேன்
ஒருபுறம் மருத்துவர்கள்
பிரசவம் பார்த்துக் கொண்டிருக்க
மலத்திலும் மூத்திரத்திலும்
இரத்தமும் சதையுமாக கழிந்த சிசுவும்
குச்சியைக் கொண்டுக் கிளற
இது காலா இது தலையா என்று
கண்ணீரோடு கனத்த பொழுதுகளும்
வழியும் பால் நமிக்கும் என்றும்
புண் ஆகும், புடை வைக்கும் என்றெல்லாம்
அறிந்தும்
பச்சை பச்சையாக கடித்துத் தின்ற
பப்பாளிக்காயும்
அன்னாச்சி பழங்களும் மட்டுமே
என்னை
அசைப்போட்டுக்கொண்டிருந்தன
தேவையின்றியும்
அம்மாவை ஏமாற்ற
மாதமொருமுறை வாங்கி
பயன்படுத்தாது வீசி எறிந்த
நாப்கின்னும்
மருந்துகடை பலவற்றில்
வாங்கி முழுங்கிய
சட்டவிரோத மாத்திரைகளுமே
மண்டைக்குள் குறுக்கும் மறுக்குமாக
குடைந்தபடியே ஓடிக்கொண்டிருந்தன
பனிக்குடமுடைந்து சொட்ட சொட்ட
யோனியின் பாதையில் நெட்டி நெட்டி
சிசுவொன்று மண்ணடைய
தவித்து நெளிந்து வெளியேறி
வீரென்று அழுது
துடித்துக்கொண்டிருக்க
சொல்லாமல்
சொல்வதாய் நினைத்துக் கொண்டேன்
ஆசைக்கு இணங்கினேனோ - அவன்
சொல்லுக்குள் மயங்கினேனோ
பயம் கொண்டு பணிந்தேனோ - அல்ல
பாதை மாறி நடந்தேனோ
தவறுதான் பெருந்தவறுதான்
உனக்கு ஒரு அண்ணனோ அக்காவோ
இந்த பாவியால்
இரத்தமும் சதையுமாக மூத்திரத்தில்
கழித்து கழுத்தை நெறித்துவிட்டேன்
செல்லமே நானென்று...........
ப.அருண்
உறவுகள்
அறுந்து போகும்
நெகிழிகளாய்(ரப்பர்) சில..!
இமைக்கும் நொடியில்
அறுத்துப் போகும்
வள்ளேடுகளாய்(பிளேடு) சில..!
பேசாமடந்தை
வார்த்தைப் போரில்
தகுதிநீக்கம் செய்யப்படும்
பேசாமடந்தைகளின் பட்டியலில்
முதலிடம் இவளுடையதோ!
உறவுகள்
அறுந்து போகும்
நெகிழிகளாய்(ரப்பர்) சில..!
இமைக்கும் நொடியில்
அறுத்துப் போகும்
வள்ளேடுகளாய்(பிளேடு) சில..!
பேசாமடந்தை
வார்த்தைப் போரில்
தகுதிநீக்கம் செய்யப்படும்
பேசாமடந்தைகளின் பட்டியலில்
முதலிடம் இவளுடையதோ!
இரகசிய ரணங்கள்
மூச்சு முட்டினும் முழுதாய் முகம் போர்த்தி
குமுறும் குரலடக்கி
தலையணையில் முகம் புதைத்து
ரணங்களை ரகசியமாக்கி
நிசப்த கூச்சலோடும்
மௌனக் கதறலோடும்
விடியலை நோக்கி நான்..
இதோ, விடியல்
மீண்டும் இருண்டு விடாதே..!
மேலும்...
கருத்துகள்