இரகசிய ரணங்கள் மூச்சு முட்டினும் முழுதாய் முகம் போர்த்தி...
இரகசிய ரணங்கள்
மூச்சு முட்டினும் முழுதாய் முகம் போர்த்தி
குமுறும் குரலடக்கி
தலையணையில் முகம் புதைத்து
ரணங்களை ரகசியமாக்கி
நிசப்த கூச்சலோடும்
மௌனக் கதறலோடும்
விடியலை நோக்கி நான்..
இதோ, விடியல்
மீண்டும் இருண்டு விடாதே..!