சனல் குமார் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சனல் குமார் |
இடம் | : நாகர்கோவில் |
பிறந்த தேதி | : 16-Nov-1998 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Mar-2022 |
பார்த்தவர்கள் | : 163 |
புள்ளி | : 6 |
என் பேனாவின் காதல்........
முடிந்து போன மணல் பரப்பின்
எல்லையில் நின்று
நீளமாய் பார்க்கையில்..!
என் காலினை கட்டிப்புரண்டு ஓலமிடும்
கடலின் அலறல்கள் கூறும்...,
காணாத உலகில் வாழும்
கடவுள்கள் பொய் என்று....!
முக்கண்ணனுக்கும்
மூச்சிறைக்கும் - எம்
மூத்தோர் எழுதிய
முத்தமிழை படித்தால்...
விம்மி விடைத்திடும்
பிதற்றிகொண்டே இருக்கும்
கேள்விகள் இல்லாத பதிலைத் தேடும்
காரணம் இல்லாமல் கலங்கும்
பின் காரணத்தைத் தேடும்
அம்மயப்பன் இருக்கயிலே
அண்டற்கு வேறு இடம் தேடும்
ஆளற்கு நாடுமுண்டு
அமர்ந்திட சிம்மாசனமும் உண்டு
ஆனாலும் அகதியாய் வாழும்
முட்டாள் அரசன்
அவன் பெயர் மனம்
நினைவுகள் தவறினேன்
நிறங்களை உலவ விட்டாய்
கனவுகள் இழக்கயில்
நிஜத்தை படைக்கிறாய்
மூச்சடைக்கும் நாட்களில்
தென்றலாய்....
இன்னும் திணறுவேன்
தீர்வு மட்டும் நீ தான்....
கிழிந்த சேலை நான்கு எடுத்து
சுற்றிப்படைத்த இடத்தில் இருந்து
நடுசாமத்தில் வரும்
குறட்டை ஒலி கூறும்
அதும் ஒரு வீடே....
என்றோ ஓர் நாள் கதைத்த கதைகள்...
நிபந்தனையற்ற புன்னகைகள்..
நிஜங்களாய் தோன்றிய பாடல்கள்...
உடைத்திட்ட ரகசியங்கள்..
உடையாத நாணங்கள்...
வேரற்ற காயங்களுக்கும்
கலங்கிய கருவிழிகள்...
நூறாயிரம் ஆசைகளும்..
ஓராயிரம் ஊடல்களும்...
கடந்து காலங்கள் ஆகியும்..
எண்ணூறு மாற்றங்கள் கண்டினும்..
அறியாத வெற்றிடம்....
யாரை தொலைத்த யாருடைய
வலிகளோ இவை......
முடிந்து போன மணல் பரப்பின்
எல்லையில் நின்று
நீளமாய் பார்க்கையில்..!
என் காலினை கட்டிப்புரண்டு ஓலமிடும்
கடலின் அலறல்கள் கூறும்...,
காணாத உலகில் வாழும்
கடவுள்கள் பொய் என்று....!