தொலைத்த வலிகள்
என்றோ ஓர் நாள் கதைத்த கதைகள்...
நிபந்தனையற்ற புன்னகைகள்..
நிஜங்களாய் தோன்றிய பாடல்கள்...
உடைத்திட்ட ரகசியங்கள்..
உடையாத நாணங்கள்...
வேரற்ற காயங்களுக்கும்
கலங்கிய கருவிழிகள்...
நூறாயிரம் ஆசைகளும்..
ஓராயிரம் ஊடல்களும்...
கடந்து காலங்கள் ஆகியும்..
எண்ணூறு மாற்றங்கள் கண்டினும்..
அறியாத வெற்றிடம்....
யாரை தொலைத்த யாருடைய
வலிகளோ இவை......