தல்லிதாசன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : தல்லிதாசன் |
இடம் | : சென்னை. (now in USA) |
பிறந்த தேதி | : 22-Feb-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Dec-2017 |
பார்த்தவர்கள் | : 80 |
புள்ளி | : 12 |
அன்னைத் தமிழின் அரவணைப்பில்
வளரத்துடிக்கும் ஓர் கவிஞன்....
பொங்கல் வாழ்த்து
எழுத விரும்பினேன்!
ஆனால்!
வறட்சியின் பிடியில் சிக்கி
வாழ்வாதார போராட்டம் நடத்தும்
விவசாயிகளின் கண்ணில் பொங்கும்
கண்ணீர்ப் பொங்கலுக்கு வாழ்த்து சொல்வதா?
அல்லது!
வாங்கியக் கடனுக்கு வட்டியாய்
தன்னுயிர் ஈந்த விவசாயிகளிடம்
பஞ்சமின்றி பொங்கி வழிந்த
தன்மானப் பொங்கலுக்கு வாழ்த்து சொல்லவா?
அல்லது!
நம்மண்ணின் வளம் காக்க
நெடுவாசலை மறித்து நின்று!
நம்மிடம் உதவிகேட்டு ஓலமிட்ட மக்களின்
ஒப்பாரிப் பொங்கலுக்கு வாழ்த்து சொல்லவா?
அல்லது!
இறந்து போன எம்சொந்தங்களுக்காக
மெழுகுவர்த்தி எந்த அனுமதி தராமல்!
எமக்காகப் போராடும் தோழர்களை சிறைபடுத்திய
அதிகாரப் பொங்கலுக்
கவலைகளை கானத்தில் கரைத்து!
கண்ணீரை கண்களில் நிறைத்து!
ராகம் தொலைத்த குயிலொன்று!
கலங்கி நிற்குது காட்டினிலே!
தொலைத்த ராகத்தை தேடிச்செல்ல
அடர்ந்த காட்டில் வழியறியாது!
உறவையெண்ணி ராகம் வரும்வரை
தொடுவானம் விட்டு விழியகலாது!
காலம் தவறாமல் பாடிவரும்!
குயிலின் கானத்தில் மட்டுமே
அதன் ஜீவன் வாழ்ந்திருக்கும்!
அந்தராகம் வந்து சேரும்வரை!
— தல்லிதாசன்
என்னைத் தொலைத்து நான்
துள்ளித் திரிந்த வீதியெல்லாம்!
என்பாத்தைத் தொட மறுத்து
நழுவிச் செல்கிறது! - நான்
உன்னைத் தொலைத்து நடக்கையில்!
-- தல்லிதாசன்
திரை விலகிய உன்
இடை கண்ட நாள்முதல்
இடை விடாமல் நான்
இமைமூடா இரவுகளைக் கடக்கிறேன்!
-- தல்லிதாசன்
சாதி சாதி சாதியென்று
அலையும் மனிதனே!
உன்இடுப்பு வேட்டி அவுந்து
கிடக்கு பாரு முதலிலே!
உன்னையும் என்னையும் மோதவிட்டு
ஒருத்தன் வாழுறான்!
அவன் மசுரைத் தொடவும் மனமில்லாமல்
உயிரை வாங்குற!
எங்களோட உயிரை வாங்குற!
ஆண்டசாதி என்ற பெருமை
உனக்கு எதுக்கய்யா! இங்கே!
நீயுமொரு அடிமை சாதி
நினைவில் இல்லையா?
மனுதர்மம் படிக்க வில்லையா?
உங்கள் வீட்டில் அடுப்பெரிக்க
விறகு அடுக்கினோம்!
கொல்லையில விறகு அடுக்கினோம்!
நீ!
எங்கவீட்டு கூரை யெரித்து
குளிரு காயுர!
சாதிவெறி சேற்றில் புரளுற!
செருப்புக் காலில் நடப்பதற்கு
தடைகள் போடுற!
உன்தெருவின் வழியை மறிக்கிற!
கோவில் கருவறைக்குள் காலை
வைக்க!
சாதி சாதி சாதியென்று
அலையும் மனிதனே!
உன்இடுப்பு வேட்டி அவுந்து
கிடக்கு பாரு முதலிலே!
உன்னையும் என்னையும் மோதவிட்டு
ஒருத்தன் வாழுறான்!
அவன் மசுரைத் தொடவும் மனமில்லாமல்
உயிரை வாங்குற!
எங்களோட உயிரை வாங்குற!
ஆண்டசாதி என்ற பெருமை
உனக்கு எதுக்கய்யா! இங்கே!
நீயுமொரு அடிமை சாதி
நினைவில் இல்லையா?
மனுதர்மம் படிக்க வில்லையா?
உங்கள் வீட்டில் அடுப்பெரிக்க
விறகு அடுக்கினோம்!
கொல்லையில விறகு அடுக்கினோம்!
நீ!
எங்கவீட்டு கூரை யெரித்து
குளிரு காயுர!
சாதிவெறி சேற்றில் புரளுற!
செருப்புக் காலில் நடப்பதற்கு
தடைகள் போடுற!
உன்தெருவின் வழியை மறிக்கிற!
கோவில் கருவறைக்குள் காலை
வைக்க!
கல்லறையில் உறங்கிய
இந்தக் கம்பனின்
கனவுகளை நிறைத்து! என்!
கற்பனை உலகை
ஆளும் பேரழகியே!
உன்!
விழியென்னும் வீணையில்
இமையென்னும் விரல்கள்
கானம் இசைக்கும்
அழகை ரசிக்க வந்தேன்!
உன்காது மடலோரம்
கதைபேசும் தென்றலினால்
நாட்டியமாடும் வளையங்களின்
நடனத்தை ரசிக்க வந்தேன்!
உன்அல்லி இதழ்களில்
தேனருந்தத் துடிக்கும்
வண்ணத்துப் பூச்சிகளின்
அதிஷ்டத்தை ரசிக்க வந்தேன்!
வெள்ளிப் புன்னகைநீ
சிந்தஉன் கன்னத்தில்
தோன்றும் குழியின்
ஆழத்தை ரசிக்க வந்தேன்!
காற்றில் கோலமிடும்
உன்கைகளில் விரலெனும்
வெள்ளைத் தூரிகைகளின்
மென்மையை ரசிக்க வந்தேன்!
உனைத்தொட ஏங்கும்
மணற்துகளை அலட்சியப்படுத்தி