ராகம் தொலைத்த குயில்
கவலைகளை கானத்தில் கரைத்து!
கண்ணீரை கண்களில் நிறைத்து!
ராகம் தொலைத்த குயிலொன்று!
கலங்கி நிற்குது காட்டினிலே!
தொலைத்த ராகத்தை தேடிச்செல்ல
அடர்ந்த காட்டில் வழியறியாது!
உறவையெண்ணி ராகம் வரும்வரை
தொடுவானம் விட்டு விழியகலாது!
காலம் தவறாமல் பாடிவரும்!
குயிலின் கானத்தில் மட்டுமே
அதன் ஜீவன் வாழ்ந்திருக்கும்!
அந்தராகம் வந்து சேரும்வரை!
— தல்லிதாசன்