முனைவர் கி ஜா பிரிசில்லா - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : முனைவர் கி ஜா பிரிசில்லா |
இடம் | : நாகப்பட்டினம் |
பிறந்த தேதி | : 16-May-1979 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 14-Sep-2016 |
பார்த்தவர்கள் | : 83 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
முனைவர் கி ஜா பிரிசில்லா செய்திகள்
கல்வி
“ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்” உலகநீதி-1. கல்வி மனிதனுடைய திறனை வளர்ச்சி பெற செய்யவும் உள்ளுணர்வை வெளிப்படுத்தவும் பண்புகளை வளர்க்கவும் துணைபுரிகின்றது. “கேடில் விழுச்செல்வம் கல்வி” என்ற வள்ளுவரின் வரிகளுக்கேற்;ப கல்வி மனித குலத்தின் அழியா செல்வமாக உள்ளது. மனிதன் பெற வேண்டிய பதினாறு வகை செல்வங்களுள் ஒன்று கல்விச் செல்வம். அறிவாளி போல் சிந்தனைச் செய்து அந்த சிந்தனையைப் பாமரனும் புரிந்து கொள்ள கூடிய வகையில் எளிதாக சொல்வது கல்வி. அத்தகைய கல்வி தொடர்பான கருத்துக்கள் பற்றி இக்கட்டுரையின் வழி காண்போம். கல்வி-விளக்;கம் கல்வி என்னும் சொல்லினை கல்வி எனப் பிரித்துப் பொருள் கொள்ளலாம்;. கல்-கல்லுதல். கல்லுதல் என்றால் தோண்டுதல் – அறிவித்தல். அதாவது மனிதனுள் புதைந்திருக்கும் ஆற்றலைத் தோண்டி, வெளிஉலகிற்கு அறிவித்தலே “கல்வி” என்னும் சொல்லின் பொருளாகும்.கல்வி என்ற தமிழ்ச்சொல்லுக்கு இணையான ஆங்கில சொல் எஜுகேஷன் (நுனரஉயவழைn) ஆகும். இதன் மூலச்சொல் லத்தீன் மொழியில் உள்ள எஜுகேர் (நுனரஉயசந) என்ற சொல்.அதன் பொருள் “வளர்;ப்;பது” (வுழ டீசiபெ ருp) மற்றும் “வெளிக்;கொணர்;வது” (வுழ டீசiபெ குழசவா) என்பதாகும். காந்தியடிகளும் ஒழுக்கம், பக்தி முதலியவற்றை வளர்ப்பதே கல்வி என்கிறார். ஆனால், இன்று கல்வி என்பது மக்களின் பண்பினை, ஒழுக்கத்தினை வளர்க்கும் பணியிலிருந்து விலகி வெறும் மதிப்பெண்களை மட்டும் மையப்படுத்தி கற்றுக்கொடுக்கும் வியபாரமாக்கபட்டுள்ளது. சிறந்த கல்வியானது மனிதனை மனிதனாக வாழ வகைச் செய்ய வேண்டும். பழங்காலத்;தில் கல்வி சங்க காலத்திலும் அதனை தொடர்ந்த காலகட்டத்திலும் கல்வி கற்றல் குருகுல அமைப்பு முறையில் இருந்தது. கல்வி பெற வேண்டின் மாணவன் ஆசிரியரைத் தேடிச் சென்று அவர்கள் தங்கி இருக்ககூடிய இடங்களுக்குச் சென்று குருவிற்கு வேண்டிய கடமைகளைச் செய்து முடித்தே கல்வி கற்று கொண்டான். இதனையே,
“உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே” என்கிறது புறநானூறு-183.
மேலும் பழங்கால கல்வி என்பது உயர்ந்தோருக்கு மட்டுமே உரியதாக நிலவியது. இது மட்டுமல்லாமல் ஒளவையார், காக்கை பாடினியார், போன்ற பெண்பார் புலவர்களால் பெண்களுக்குக் கல்வி மறுக்கப்படவில்லை என்பது அறியமுடிகிறது. இவர்களைத் தவிர ஐந்நூறுக்கும் மேற்ப்பட்ட பெண்பாற் புலவர்கள் வாழ்ந்தாக பல நூல்கள் மூலம் அறியலாம.; கல்;;வியின் மேன்மை: கல்வி கற்பதால் மனிதன் மேன்மையடைகிறான். உயர்வடைகிறான்.புகழடைகிறான்.தொல்காப்பியர் தலைவனுக்கும் தலைவிக்கும் இருக்க வேண்டிய பத்து பொருத்தங்களுள் ஒன்றாக கல்வியை குறிப்பிடுகின்றார். இதிலிருந்தே நாம் கல்வியின் மேன்மையை உணரலாம். அதுவே ஒரு மனிதனை அணிசெய்யும் அணிகலன். இதனைத் தவிர வேறு அணிகலன் தேவையில்லை. இதனையே நாலடியாரும், “குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும் மஞ்சள் அழகும் அழகல்ல: நெஞ்சத்து நல்லம் யாம் என்னும் நடுவு நிலைமையால் கல்வி யழகே அழகு” என்று சுட்டுகின்றது. ஏலாதியும் புற அழகுச் சாதனங்களும், உடலுறுப்புகளும், ஒப்பனைகளும் மனிதனுக்கு அழகைத் தருவது கிடையாது. கல்வி ஒன்றே அழகு தரும் என்று (ஏலாதி-74) இயம்புகின்றது. “கற்றோர்க்கு கல்வி நலனே நலனல்லால் மற்றோர் அணிகலன் வேண்டாவாம்” என்று கல்வியை அணிகலன் போல போற்றுகிறது நீதிநெறிவிளக்கம். ஆக, கல்வி அழகே அழகு. கல்வி அறியாமையைப் போக்கும் மருந்து. கொடுக்கக் கொடுக்கக் குறையாது. தாழ்குலத்தில் பிறந்தவரையும் உயர்குலத்தவராக்கும். தந்தையின் கடமை தம் மக்களுக்குக் கல்வி அறிவு ஊட்டுவது. கல்வி எல்லையில்லாதது. கற்பவர் வாழ்;நாளோ எல்லைக்குட்பட்டது. எனவே நல்லவற்றைத் தேடிக் கற்றல் வேண்டும். “கற்று அறிந்தார் கண்ட அடக்கம்;அறியாதார் பொச்சாந்து தம்மைப் புகழ்ந்து உரைப்பர், தெற்ற:- அறை கல் அருவி அணி மலை நாட:- நிறை குடம் நீர் தளும்பல் இல்” பழமொழி-243 நிறை குடத்தினைப் போன்று கல்வியறிவுடையவர்கள் தன்னடக்கம் உடையவர்களாய் இருப்பர் என பழமொழிநானூறு அழகாக எடுத்து இயம்புகிறது. நூல்களுக்கு இழிவு சேர்க்கும் சொற்களை மற்றவர் விரும்பினாலும் சொல்லாது இருத்தல், இன்சொல் பேசுதல் போன்றவற்றை கற்றிந்தார் கடமைகளாக திருகடுகம் (32) கூறுகிறது.
“கற்க கசடறக் கற்ப்பவை கற்றபின் நிற்க அதற்க்குத் தக” குறள் - 391. “உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே” என்கிறது புறநானூறு-183.
மேலும் பழங்கால கல்வி என்பது உயர்ந்தோருக்கு மட்டுமே உரியதாக நிலவியது. இது மட்டுமல்லாமல் ஒளவையார், காக்கை பாடினியார், போன்ற பெண்பார் புலவர்களால் பெண்களுக்குக் கல்வி மறுக்கப்படவில்லை என்பது அறியமுடிகிறது. இவர்களைத் தவிர ஐந்நூறுக்கும் மேற்ப்பட்ட பெண்பாற் புலவர்கள் வாழ்ந்தாக பல நூல்கள் மூலம் அறியலாம.; கல்;;வியின் மேன்மை: கல்வி கற்பதால் மனிதன் மேன்மையடைகிறான். உயர்வடைகிறான்.புகழடைகிறான்.தொல்காப்பியர் தலைவனுக்கும் தலைவிக்கும் இருக்க வேண்டிய பத்து பொருத்தங்களுள் ஒன்றாக கல்வியை குறிப்பிடுகின்றார். இதிலிருந்தே நாம் கல்வியின் மேன்மையை உணரலாம். அதுவே ஒரு மனிதனை அணிசெய்யும் அணிகலன். இதனைத் தவிர வேறு அணிகலன் தேவையில்லை. இதனையே நாலடியாரும், “குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும் மஞ்சள் அழகும் அழகல்ல: நெஞ்சத்து நல்லம் யாம் என்னும் நடுவு நிலைமையால் கல்வி யழகே அழகு” என்று சுட்டுகின்றது. ஏலாதியும் புற அழகுச் சாதனங்களும், உடலுறுப்புகளும், ஒப்பனைகளும் மனிதனுக்கு அழகைத் தருவது கிடையாது. கல்வி ஒன்றே அழகு தரும் என்று (ஏலாதி-74) இயம்புகின்றது. “கற்றோர்க்கு கல்வி நலனே நலனல்லால் மற்றோர் அணிகலன் வேண்டாவாம்” என்று கல்வியை அணிகலன் போல போற்றுகிறது நீதிநெறிவிளக்கம். ஆக, கல்வி அழகே அழகு. கல்வி அறியாமையைப் போக்கும் மருந்து. கொடுக்கக் கொடுக்கக் குறையாது. தாழ்குலத்தில் பிறந்தவரையும் உயர்குலத்தவராக்கும். தந்தையின் கடமை தம் மக்களுக்குக் கல்வி அறிவு ஊட்டுவது. கல்வி எல்லையில்லாதது. கற்பவர் வாழ்;நாளோ எல்லைக்குட்பட்டது. எனவே நல்லவற்றைத் தேடிக் கற்றல் வேண்டும். “கற்று அறிந்தார் கண்ட அடக்கம்;அறியாதார் பொச்சாந்து தம்மைப் புகழ்ந்து உரைப்பர், தெற்ற:- அறை கல் அருவி அணி மலை நாட:- நிறை குடம் நீர் தளும்பல் இல்” பழமொழி-243 நிறை குடத்தினைப் போன்று கல்வியறிவுடையவர்கள் தன்னடக்கம் உடையவர்களாய் இருப்பர் என பழமொழிநானூறு அழகாக எடுத்து இயம்புகிறது. நூல்களுக்கு இழிவு சேர்க்கும் சொற்களை மற்றவர் விரும்பினாலும் சொல்லாது இருத்தல், இன்சொல் பேசுதல் போன்றவற்றை கற்றிந்தார் கடமைகளாக திருகடுகம் (32) கூறுகிறது.
கற்றலைவிடக் கற்றலின்படி நிற்றல் முதன்மையானது. இதனையே
“நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை” என்று கொன்றைவேந்தன் வலியுறுத்துகிறது. “ கற்கை நன்றே, கற்கை நன்றே, பிச்சை புகினும் கற்கை நன்றே” பிச்சை எடுத்தாகினும் கல்வி கற்க வேண்டும் அக்கல்வியினை “இளமையில்; கல்;” என்கிறார் ஓளவை பெருமாட்டி. கல்வியை இளமையில் பயிலுவது பொருத்தம். இளமை, கல்விக்கென இயற்கையால் வழங்கபடுவது. அதனை வேறு வழியில் செலவழிப்பது இயற்கைக்கு மாறுப்பட்டு நடப்பதாகும். ஆகவே இளமையில் கல்வி தேவை. பின்னர் அக்கல்விகேற்ற வாழ்க்கை- நடை – ஒழுக்கம் தேவை என திரு.வி.க. சுட்டியுள்ளார். கல்வியில் தேர்ச்சி பெற விரும்புகிறவன் எட்டு காரியங்களை விட்டு விட வேண்டும். அவை: உடலுறவு, நாவின் திருப்தி, கோபம், பேராசை, அழகுபடுத்திக் கொள்வது, களியாட்டம், அதிநித்திரை, எதையும் மிதமிஞ்சி அனுபவிப்பது போன்றவையாகும் என அர்த்த சாஸ்த்;திரம் குறிப்பிடுகின்றது. கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற புறநானூற்றுத் தொடர் போல் கல்வி அறிவுடையோர்கள் செல்லும் நாடுகள் எல்லாம் அயல்நாடுகள் ஆகா. ஆகவே “ ஆற்று உணா வேண்டுவது இல்”. என்று பழமொழி நானூறு(55) கூறுவது கற்றவருக்கு மட்டும் உரித்தாகிறது. இதுபோல் கல்வி ஒருவர்க்கு உற்றத் துணையாகி அறிவின்மையை நீக்கி அறிவை வளர்க்கிறது. கல்வியின் மேன்மையைப் பற்றி “ அம்மையீர் சொன்ன வண்ணம் அனைத்துக்கும் கல்வி வேண்டும் செம்மையிற் பொருள் ஒவ்வொன்றின் பண்புகள் தெரிதல் வேண்டும் இம்மக்கள் தமக்குள் மேலோர் இழிந்தவர் என்னும் தீமை எம்மட்டில் போமோ நன்மை அம்மட்டில்; இங்குண்டாகும்” என்று பாரதிதாசன்; குடும்ப விளக்கில் அனைவரும் கல்வி பெற வேண்டும் என்றும் உயர்ந்தவர் தாழந்தவர் என்ற கொடியப் பழக்கம் நம்மை; விட்டகன்றுவிடுகிறது என்றும் கல்வியின் பயன்களைப் பட்டியலிட்டுள்ளார். இன்;றைய கல்;;வி முறை: இன்றைய உலகில் கல்வி இருபாலர்க்கும் உரியதாக இருக்கிறது. காட்டாயக் கல்வியின் மூலம் அனைவரும் கல்வி கற்று அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்குகின்றனர். ஆனால் இன்றைய மாணவர்களிடம் எந்த கல்வியை கற்றால் அதிகமாக பணம் கிடைக்குமோ, அந்தக் கல்வியைக் கற்பதற்கே கடும் போட்டி நிலவுகிறது. இன்றைய கல்வி அறிவை வளர்க்கவில்லை. உணர்ச்சிகளைக் கையாள கற்றுத்தரவில்லை வாழ்கை நெறிமுறைகளை செயல்படுத்த வாய்ப்பளிக்கவில்லை. அதனால் தான் தெய்வமாக மதிக்கவேண்டிய ஆசிரியரை கொலை செய்யும் அளவிற்கு மாணவர்கள் துணிந்து விட்டனர். வாழ்கையை பற்றிய தெளிவைத் தராத ஏட்டுக் கல்வியை பயில தம் வாழ்நாளில் இருபது வருடத்திற்கு மேல் செலவழிக்க வேண்டிய சூழ்நிலையில் மாணவர்கள் தள்ளபட்டு இருக்கிறார்கள். கல்வி வியபாரமாகி வருகிறது. அந்த வியாபாரக் கல்வி வெறும் பணம் சம்பாதிக்கும் இயந்தரங்களை மட்டுமே உருவாக்குகிறது. ஆகவே மாணவர்கள் சிறு பிரச்சினைகளையும் கையாள தெரியாமல் மனம் தளர்ந்து தற்கொலை முயற்;சியில் ஈடுபடுகின்றனர். “ஸா வித்யா யா விமுக்தயே” -- எது மனிதனை அனைத்துத் தளைகளினின்றும் விடுவிக்குமோ அதுவே கல்வி என்கிறது விஷ்ணுபுராணம். ஆனால் நம் நவீன கல்வி முறைகள் வாழ்க்கை நெறிகளையும் அறக்கருத்துக்களையும் நீதிபோதனைகளையும் கற்றுத் தருவது இல்லை. “வாழ்நாள் முழவதும் உங்களால் ஜீரணிக்கமுடியாமல் உள்ளிருந்து தொந்தரவு தரக்கூடிய செய்திகளை மூளைக்குள் திணிப்பது அல்ல கல்வி. வாழ்கையை வளப்படுத்துகின்ற மனிதனை உருவாக்குகின்ற குணத்தை மேம்படுத்துகின்ற கருத்துக்களை ஜீரணம் செய்யக்கூடிய கல்வியே நாம் வேண்டுவது.”(ஞானத{பம் 5239) என விவேகானந்தர் கூறுகிறார். அறிவை வளரச்செயவ்தே அருமையான கல்வி! உள்ளத்தை மலர செய்வதே உண்மையான கல்வி! பண்பை வளர்ப்பதே பயனுள்ள கல்வி!!. இன்று பெண்களும் கல்விகற்று ஆண்களுக்கு நிகரென எல்லாத் துறைகளிலும் ஆழங்கால் ;பதித்து;ள்ளனர். பெண்களுக்கு கல்வி வேண்டும் குடித்தனம் பேணுதற்கே! பெண்களுக்கு கல்வி வேண்டும் மக்களை பேணுதற்கே! பெண்களுக்கு கல்வி வேண்டும் உலகினைப் பேணுதற்கே! பெண்களுக்கு கல்வி வேண்டும் கல்வியைப் பேணுதற்கே! என்று பெண் கல்வியின் இன்றியமையாமைப் பற்றி குடும்பவிளக்கில் பாரதிதாசன் கூறுகிறார்.;;;பெண்கள் எந்த சூழ்நிலையிலும் தன்னம்பிக்கை குறையாமல் வாழ வேண்டும் என்றால் பெண் கல்வி மிகவும் அவசியம்;. எதற்காகவும் பிறரை சாராமல் சுயமாக வாழலாம.; அதே சமயம் கற்ற பெண்கள் நமது இந்திய கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் கட்டிக் காக்க வேண்டியதை தம் கடமையாக கருத வேண்டும்.கல்வியால்தங்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதோடு மட்டுமல்லாமல் குடும்ப கௌரவத்தையும் காப்பாற்றுபவர்களாய் இருக்க வேண்டும். கல்வி பெண்களுக்கு தன்னம்பிக்கை தருவதாக இருக்கவேண்டுமே தவிர தன் குடும்ப வாழ்வை சீரழித்து கொள்வதாக இருத்தல் கூடாது.ஆகவே ஒவ்வொரு பெண்களும் தங்கள் இல்லறங்களை நல்லறங்களாக்க அரும்பாடுபடல் வேண்டும்.நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என நாளும் வாழ்ந்திடல் வேண்டும். இன்றைய காலகட்டங்களில் மாணவர்கள் கணினி முறையிலும் டிஜிட்டல் முறையிலும் கல்வி கற்கின்றனர். “உலகமே எலி வாகனத்தில்; பயணிக்கிறது எலிப் பொறிக்குள் மனிதர்கள் மாட்டிக்கொள்ளும் எட்டாம் அதிசயம் சிவ பார்வதியைச் சுற்றி பிள்ளையாராக வாமன வரிகள் ஓரடிப் பெட்டிக்குள் உலகைச்; சுற்றுகிறார்கள்” - எலிப்பொறிக்குள் மனிதன்- ஆண்டாள் பிரியதர்சினி என்று உலகம் கணினி வசம் சிறைபட்டுவிட்டதாக நகைச்சுவையாக கூறுகிறார். காலத்கேற்ற கல்வியை மாணவர்;களுக்கு கொடுத்தால் உலக அரங்கில் இந்தியா வல்லரசாக மிளிரும். ஆறிவியல் விஞ்ஞானியான ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் கல்வியில் மேம்பட்டு படிப்;படியாக வளர்ந்து இன்று உலகம் போற்றும் கலாமாக திகழ்கிறார். இவர் மாணவர்களுக்கு கல்வி வளர்ச்சியின் முன்னோடியாக உள்ளார். ஆகவே
“எல்லோரும் கற்போம்!
ஒன்றாகக் கற்போம்!!
நன்றாகக் கற்போம்!!!
முனைவர் கி ஜா பிரிசில்லா - குமரிப்பையன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Sep-2016 2:22 am
தமிழா தமிழா சற்று சிந்தித்து பார்,
*கட்சத்தீவு உன்னுடையது
ஆனால் நீ போக
முடியாது,
*வங்கக்கடல் உன்னுடையது
ஆனால் நீ மீன்
பிடிக்க முடியாது,
*காவிரி ஆறு உன்னுடையது
ஆனால்உனக்கு தண்ணீர் கிடையாது,
*முல்லைப்பெரியாறு உன்னுடையது
ஆனால்
உன்னால் நீரை தேக்க முடியாது,
*பாலாறு உன்னுடையது
ஆனால் அதிலிருந்து
நீரைப் பெற முடியாது,
*நெய்வேலி உன்னுடையது
ஆனால் 75%
மின்சாரம் வெளி மாநிலத்திற்கு,
*இராசராசன் கட்டிய பெரிய கோவில்
உன்னுடையது ,
ஆனால் தமிழில் நீ வழிபட முடியாது,
*நீதிமன்றத்தில் வழக்கு உன்னுடையது
ஆனால் தமிழில் வழக்காட முடியாது,
*அரசுப் பள்ளிகள் உன்னுடையது ,
ஆனால்
தமிழில் உயர்கல்வ
விடிவு காலம் நிச்சயம் பிறக்கும்..! நம்புவோம்!! 14-Dec-2016 8:28 pm
இந்த கேடு கெட்ட அரசியல் வியாபாரிகள் நம்மை ஒன்றுசேர விடமாட்டார்கள்.!
சாதியாலும் மதத்தாலும் பிரித்தாழ்கிறார்கள்.
18-Sep-2016 1:49 pm
பயிர்கள் வாடினாலும், உயிர்கள் போனாலும் பிரதம மந்திரிக்கு மாநில அரசியலில் தலையிட உரிமையில்லையாம். அரசியல்வாதிகள் தங்களுக்கு சாதகமான சூழ்நிலையை பயன்படுத்தி குறுக்குழவு ஓட்ட நினைக்கிறார்கள். பிறமா நிலம் என்றால் ஒரு நீதி, தமிழ்நாடென்றால் ஒரு நீதி. ஆயிரம் ஓட்டைகளில் ஒட்டடையாகி நிற்கும் இந்த சட்டங்களை தூக்கி வீசவேண்டும். எதற்கும் உதவாத சட்டங்கள் எதற்கு. முதலில் தமிழர்கள் நாம் அரசியல் பாகுபாடின்றி ஒன்றிணைவோம். இனியும் விழித்துக்கொள்ளாவிட்டால் எல்லாம் நாசம்தான்.
18-Sep-2016 1:16 pm
அஹிம்சை முறையிலா..!!!
அன்று...
பாமர மக்கள்..
படிப்பு குறைவு..
நாட்டுக்காக உழைப்பு..
நல்ல தலைவர்கள்..!
இன்று..
படித்த மக்கள்..
நடிக்கும் கூட்டம்..
வீட்டுக்காக உழைப்பு..
கெட்ட தலைவர்கள்..!
ஓசை முடங்கிய மாக்கள்..
ஓசியில் வீழும் மக்கள்..
ஆழும் அரசுகள் சொல்லும்..
ஆசை அரசியல் கொல்லும்..
இங்கு இனி
அகிம்சை எப்படி வெல்லும்.?
உங்கள் கேள்வி நியாயமானதே.. ஆனால்.. வெல்லுமா.!!
உங்களைபோல் நானும்..??!!
17-Sep-2016 3:36 pm
கருத்துகள்