லோகேஷ் நாகராஜன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  லோகேஷ் நாகராஜன்
இடம்:  சேலம்
பிறந்த தேதி :  01-Jan-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-May-2017
பார்த்தவர்கள்:  481
புள்ளி:  25

என் படைப்புகள்
லோகேஷ் நாகராஜன் செய்திகள்
லோகேஷ் நாகராஜன் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Oct-2018 10:59 am

தெள்ளத் தெளிந்த வானம்
மெல்ல சிவந்த நேரம்..
கதைகள் பேசி காற்று
உயிரில் கலந்த சமயம்..

நினைவுகள் சூழ்ந்த என்னை
கண்ணீர் சூழும் முன்னே
கவிதை காதல் செய்ய
கால்கள் தீண்டின அலைகள்..

தனிமை தொலைக்க மெல்ல,
இருவிழி கவியென தோன்றி
உயிரொளி பருகி அழைத்தாய்
நாம் கடந்த தடங்கள் காண..

தவிர்க்க நினைத்தேன் எனினும்
நினைக்க தவிக்கிறது உள்ளம்..
உன் மீளா கனவுகளால் மெல்ல
காதல் மீட்டிய நாட்களை..

உன் மௌனத்தின் யவனத்தில்
கவனம் தொலைத்த நாட்களை..
உன் அன்பின் விழிமொழியில்
கவிமொழி கற்ற நாட்களை..

என்றும் அழியா தடயங்களாய்
உன் விரல் வருடிய பொழுதுகளை..
என்றும் மறவா நினைவுகளாய்
உன் விழி தீண்டிய

மேலும்

லோகேஷ் நாகராஜன் - லோகேஷ் நாகராஜன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Feb-2018 10:12 am

மகிழ்ச்சி மொழி கேட்டுத் தவழும் வயதில்
மரண மொழி கேட்டு மாண்டது ஒரு சிசு....

கட்டப்பட்ட இவ்வுயிரின் உள்ளே
அவிழ்க்க படாத கேள்விகள்
எத்தனை இருந்திருக்கும்?

பசியிலே வீறிட்டு அழுத தன்னை
யாரும் பாராத துயர் சொல்லி
இருக்குமோ?

மரணம் புரியாது;
மாண்டுவிட்ட தன் தாயை
விளையாட்டுத் துணையாக்க
எழுப்ப கேட்டு இருக்குமோ?

ஓயாத குண்டு மழையிலே
அடிபட்டு கிடந்த தன்னைக்
காப்பாற்ற யாரும் வராத
காரணம் தான் கேட்டிருக்குமோ?

கவலை வேண்டாம்...
வாழ்வின் வாசனை அறியா
இப்பிஞ்சு உள்ளம்,
எந்த கேள்விகளையும் இனி
நம்மை கேட்கப் போவதில்லை..

உள்ளத்தின் உறுத்தலையும்
எளிதாய் கடந்து போக,
"நம்மால் என்ன செ

மேலும்

லோகேஷ் நாகராஜன் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Feb-2018 10:12 am

மகிழ்ச்சி மொழி கேட்டுத் தவழும் வயதில்
மரண மொழி கேட்டு மாண்டது ஒரு சிசு....

கட்டப்பட்ட இவ்வுயிரின் உள்ளே
அவிழ்க்க படாத கேள்விகள்
எத்தனை இருந்திருக்கும்?

பசியிலே வீறிட்டு அழுத தன்னை
யாரும் பாராத துயர் சொல்லி
இருக்குமோ?

மரணம் புரியாது;
மாண்டுவிட்ட தன் தாயை
விளையாட்டுத் துணையாக்க
எழுப்ப கேட்டு இருக்குமோ?

ஓயாத குண்டு மழையிலே
அடிபட்டு கிடந்த தன்னைக்
காப்பாற்ற யாரும் வராத
காரணம் தான் கேட்டிருக்குமோ?

கவலை வேண்டாம்...
வாழ்வின் வாசனை அறியா
இப்பிஞ்சு உள்ளம்,
எந்த கேள்விகளையும் இனி
நம்மை கேட்கப் போவதில்லை..

உள்ளத்தின் உறுத்தலையும்
எளிதாய் கடந்து போக,
"நம்மால் என்ன செ

மேலும்

லோகேஷ் நாகராஜன் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Nov-2017 10:43 am

சின்ன ஒளியொன்று மெல்ல சுடராகி
ஜீவன் எங்கும் பாயும்...
அன்பு மொழியொன்று அழகின் வழியாகி
உள்ளம் எங்கும் சூழும்...

கண்ட காட்சியொன்று கவிதை உருவாகி
கற்பனை எங்கும் சுழலும்...
தூவல் இதழொன்று தூவிய முத்தமாகி
காதல் எதிலும் மலரும்...

அது என்ன நேர்கிறது என்றுணர முடியாது
உள்ளம் மகிழ்கின்ற நேரம்..!!
கவிதை எழுதுகின்ற நேரம்,
அது தமிழவள் காதல் புரிகின்ற நேரம்...!!

மேலும்

லோகேஷ் நாகராஜன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Aug-2017 10:14 am

சாதி மதங்கள் ஆட்டிப் படைக்கும்
கலவரத் தீயாய் சுதந்திரம்
சின்னஞ் சிறுமியும் அஞ்சி நடுங்கும்
காமுகன் பார்வையாய் சுதந்திரம்

பிஞ்சு குழந்தைகளின் மரணத்தைக்
கொஞ்சமும் சட்டை செய்யா சுதந்திரம்
நியாயம் தவறிய தீயோர்க்கு
நீதியை வாரி வழங்கும் சுதந்திரம்

வலியோர் விதைத்த வறுமையில்
எளியோர் தொலைக்கும் உடமைகளில்
கிளர்ச்சி தடுக்கும் அடக்குமுறையில்
எங்கும் மகிழ்ந்து தவழுது சுதந்திரம்...

சிந்தனை வீரர்கள் உதிரம்
சிந்தி மகிழ்ந்தது இதை பெறவா?
கயவர்கள் மட்டும் ஆள் மாறி
காட்சிகள் மாறா நிலை பெறவா?

இடிகுரல் கேளா ஆழ்குளத்து மீனாய்
இனியும் காலம் கழித்திட நினைக்கும்
அடிமை உள்ளம் அனைத்திற்கும்
"சு

மேலும்

சிந்தனையைத் தட்டி எழுப்பும் வரிகள்.....அருமை ☺ 15-Aug-2017 12:19 pm
வேதனையை விரக்தியினை கண்டு மனம் நொந்ததா சோதனைகள் தீரவில்லை சுதந்திரம்தான் வந்ததா ? அருமை .! வாழ்த்துகள் . 15-Aug-2017 10:29 am
லோகேஷ் நாகராஜன் - லோகேஷ் நாகராஜன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Jun-2017 10:40 pm

வார்த்தைகள் கூட அவ்வளவு
கதை பேசி இருக்காது
காதல் நாவல் எழுதி விட்டது
அவள் பார்வை..!!

மேலும்

சிறப்பு!! 19-Aug-2017 12:51 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

மகேஷ் முருகையன்

மகேஷ் முருகையன்

தஞ்சை மற்றும் சென்னை
வாசு

வாசு

தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (3)

மகேஷ் முருகையன்

மகேஷ் முருகையன்

தஞ்சை மற்றும் சென்னை
வாசு

வாசு

தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (3)

வாசு

வாசு

தமிழ்நாடு
மகேஷ் முருகையன்

மகேஷ் முருகையன்

தஞ்சை மற்றும் சென்னை
மேலே