மனிதம் எங்கே
மகிழ்ச்சி மொழி கேட்டுத் தவழும் வயதில்
மரண மொழி கேட்டு மாண்டது ஒரு சிசு....
கட்டப்பட்ட இவ்வுயிரின் உள்ளே
அவிழ்க்க படாத கேள்விகள்
எத்தனை இருந்திருக்கும்?
பசியிலே வீறிட்டு அழுத தன்னை
யாரும் பாராத துயர் சொல்லி
இருக்குமோ?
மரணம் புரியாது;
மாண்டுவிட்ட தன் தாயை
விளையாட்டுத் துணையாக்க
எழுப்ப கேட்டு இருக்குமோ?
ஓயாத குண்டு மழையிலே
அடிபட்டு கிடந்த தன்னைக்
காப்பாற்ற யாரும் வராத
காரணம் தான் கேட்டிருக்குமோ?
கவலை வேண்டாம்...
வாழ்வின் வாசனை அறியா
இப்பிஞ்சு உள்ளம்,
எந்த கேள்விகளையும் இனி
நம்மை கேட்கப் போவதில்லை..
உள்ளத்தின் உறுத்தலையும்
எளிதாய் கடந்து போக,
"நம்மால் என்ன செய்ய முடியும்?"
என்ற அற்புத காரணம் தான்
நம் கையில் உண்டே...
சலனமின்றி நிச்சயம் நம்மை நாம்
தினமும் ஏமாற்றிக் கொள்ளலாம்
"நாம் மனிதர்கள் தான்" என்று🤐🤐..
#prayforSYRIA #spread_humanity
#யாதும்_ஊரே_யாவரும்_கேளீர்