பிரியாத வரம் வேண்டும்

முதல் சந்திப்பிலே ஒப்பந்தம் செய்து காெண்டாேம்
ஒரு பாேதும் பிரிய மாட்டாேம் என்று
சின்னச் சீண்டல்களாேடு பல நாட்கள்
சில நிமிடப் பிரிவுகளில் புரிந்தாேம்
பிரிவின் வலியில் காதலை
மீண்டும் காணும் வரை
உயிர் துடிக்கும் ரணமது
உனக்கும் தெரியும்
பிரிந்த பாேதெல்லாம் மீண்டும் சேர
எத்தனையாே காரணங்கள் இருந்திருக்கலாம்
ஏதாே ஓர் சூழ் நிலை உனைப் பிரித்துச் சென்று விட
உனை நினைத்து ஏங்குகிறது இதயம்
மீண்டும் சேருமா நம் காதல் என்று
பிரியாத வரமாய் நினைவுகளைத் தந்து
நீ மட்டும் எங்கே சென்றாய்?

எழுதியவர் : அபி றாெஸ்னி (26-Feb-18, 11:12 am)
சேர்த்தது : Roshni Abi
பார்வை : 199

மேலே